பாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா ரெசிபி (Almond & White Chocolate Gujiya Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா
சாக்லேட் குஜியா செய்முறை
 • சமையல்காரர்: Manish Mehrotra
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஒயிட் சாக்லேட், தேங்காய், வெல்லம், ஏலக்காய், பாதாம் மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பான ரெசிபியை ஹோலி பண்டிகையின் போது செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா சமைக்க தேவையான பொருட்கள்

 • மாவு தயாரிக்க:
 • 2 கப் மைதா
 • 1/4 கப் நெய்
 • 1/2 கப் தண்ணீர்
 • ஸ்டஃப் செய்ய:
 • 1 கப் ஒயிட் சாக்லேட்
 • 1/4 கப் உலர்ந்த தேங்காய்
 • ஒரு சிட்டிகை ஏலக்காய்
 • 1/2 கப் பாதாம்
 • 1 மேஜைக்கரண்டி வெல்லம்

பாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா எப்படி செய்வது

 • 1.மைதா, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
 • 2.ஒரு பௌலில் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
 • 3.பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து வைத்து கொள்ளவும்.
 • 4.சாக்லேட் மற்றும் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ளதில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
 • 5.அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
 • 6.அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். சுடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.
 • 7.ஹோலி பண்டிகையின் போது இதனை செய்து சாப்பிடலாம்.
Key Ingredients: மைதா , நெய் , தண்ணீர், ஒயிட் சாக்லேட் , உலர்ந்த தேங்காய், ஏலக்காய் , பாதாம் , வெல்லம்
Comments

Advertisement
Advertisement