ஆப்பிள் ரப்டி ரெசிபி (Apple Rabdi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • ஆப்பிள் ரப்டி
 • ஆப்பிள் ரப்டி
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஆப்பிள், பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து செய்யப்படும் இந்த ரப்டி பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்புகளில் ஒன்று. இதில் பாலும் சேர்க்க படுவதால் க்ரீமியாக இருக்கிறது. இரவு உணவிற்கு பின் இதனை தாராளமாக பரிமாறலாம். ஆரோக்கியத்திற்கு எவ்வித குறையும் ஏற்படுத்தாத இனிப்பு பதார்த்தம்தான் இந்த ஆப்பில் ரப்டி.

ஆப்பிள் ரப்டி சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 நடுத்தரமாக ஆப்பிள்
 • 1 லிட்டர் பால்
 • 4 மேஜைக்கரண்டி சர்க்கரை
 • 1/4 தேக்கரண்டி ஏலக்காய்
 • 8-10 பாதாம், நறுக்கப்பட்ட
 • 8-10 பிஸ்தா, நறுக்கப்பட்ட

ஆப்பிள் ரப்டி எப்படி செய்வது

 • 1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும். அடுப்பை சிம்மிலேயே வைத்து, அரை லிட்டராக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
 • 2.சுண்டிய பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
 • 3.இரண்டு ஆப்பிளை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். நறுக்கிய ஆப்பிளை பாலுடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேக விடவும்.
 • 4.பின் அதில் ஏலக்காய் பொடி, நறுக்கி வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை தூவி இறக்கவும்.
 • 5.ஒரு சின்ன பௌலில் மாற்றி, மீதமுள்ள ஆப்பிளை மெல்லிசாக சீவி அதில் சேர்த்து சூடாகவோ அல்லது ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் சாப்பிட தித்திப்பாக இருக்கும்.
Key Ingredients: ஆப்பிள், பால், சர்க்கரை, ஏலக்காய், பாதாம், பிஸ்தா
Comments

Advertisement
Advertisement