பேபி கார்ன் சூப் ரெசிபி (Baby Corn Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பேபி கார்ன் சூப்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

முட்டைக்கோஸ், குடைமிளகாய், மஷ்ரூம் மற்றும் பேபி கார்ன் சேர்த்து ருசியான சூப் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பேபி கார்ன் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பேபி கார்ன்
 • 4 கப் தண்ணீர்
 • 1 தேக்கரண்டி இஞ்சி
 • 1 தேக்கரண்டி பூண்டு
 • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்
 • 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி
 • 2 மேஜைக்கரண்டி முட்டைக்கோஸ்
 • 2 மேஜைக்கரண்டி குடைமிளகாய்
 • 2 மேஜைக்கரண்டி மஷ்ரூம்
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 • 4 மேஜைக்கரண்டி சோள மாவு கரைசல்
 • 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • சுவைக்க உப்பு

பேபி கார்ன் சூப் எப்படி செய்வது

 • 1.ஒரு கடாயில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.
 • 2.அத்துடன் கார்ன் மற்றும் காய்கறிகள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.
 • 3.அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாக வரும்வரை கிளறி பின் அதில் முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
 • 4.அடுப்பை நிறுத்திவிட்டு பின் சூடாக பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement