பாதாம் குல்பி ரெசிபி (Badam Aur Gulkand Ki Kulfi Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பாதாம் குல்பி
பாதாம் குல்பி செய்முறை
 • சமையல்காரர்: Ajay Chopra
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பாதாம் குல்பி : கோடைக்காலம் என்றாலே ஐஸ்க்ரீமைத்தவிர மனம் வேறு எதையும் தேடுவதில்லை. வீட்டிலே குல்பி ஐஸ்ஸினை செய்து சாப்பிட்டு மகிழலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் குல்பி செய்முறை இதோ

பாதாம் குல்பி சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 gms பாதாம்
 • 40 gms ரோஜா இதழ்கள்
 • 1.5 லிட்டர் பால்
 • 80 gms கோவா(இனிப்பில்லாதது)
 • 70 gms சர்க்கரை
 • சில குங்குமப்பூ

பாதாம் குல்பி எப்படி செய்வது

 • 1.பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் உறிக்கவும் 90 சதவீதம் அளவை பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
 • 2.ரோஜா இதழ்களை சுத்தம் செய்து ஊறவைத்து சர்க்கரை பாகுவில் போட்டு சமைக்கவும். சர்க்கரைபாகு திக்காகும் வரை சமைப்பது முக்கியம்.
 • 3.குங்க்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கரைத்து வடிகட்டவும்.
 • 4.பாலை கொதிக்க வைத்து சுண்ட வைக்கவும், அதனுடன் கோவா, பாதாம் பேஸ்ட், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ மற்றும் கோவா ஆகியவற்றைச் சேர்த்து கரையும் வரை சமைக்கவும்.
 • 5.கலவை ஆறியதும் குல்பி அச்சில் ஊற்றில் நறுக்கிய பாதாம் துண்டுகள் மற்றும் ரோஜா இதழ்களைப் போட்டு ஃபிரீஸ் பண்ணவும். நன்றாக செட் ஆனதும் பரிமாறவும்.
Key Ingredients: பாதாம், ரோஜா இதழ்கள், பால், கோவா(இனிப்பில்லாதது), சர்க்கரை, சில குங்குமப்பூ
Comments

Advertisement
Advertisement