பாதாம் கா கவா ரெசிபி (Badam ka Kahwa Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பாதாம் கா கவா
 • சமையல்காரர்: Kunal Kapur
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

காஷ்மிரில் தயாரிக்கப்படும் பாரம்பரிய க்ரீன் டீயின் பெயர் கவா. இது குளிர்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டீ தயாரிப்பில் பாதாம் சேர்ப்பதால் இதன் ருசி புதுமையானதாக இருக்கும். பாதாமில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருப்பதால் ஆரோக்கிய பானமாகவே உடலில் செயல்படுகிறது. இதற்காக காஷ்மிர் செல்ல தேவையில்லை. இதை செய்து பாருங்கள்.

பாதாம் கா கவா சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 எண்ணிக்கை க்ரீன் டீ பேக்ஸ்
 • 3 மேஜைக்கரண்டி நறுக்கிய பாதாம்
 • 2 எண்ணிக்கை ஏலக்காய்
 • 1 பட்டை
 • 2 கிராம்பு
 • 4 தேக்கரண்டி தேன்
 • 8 குங்குமப்பு

பாதாம் கா கவா எப்படி செய்வது

 • 1.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும்.
 • 2.அடுப்பை சிம்மில் 3 நிமிடங்கள் வைக்கவும். பின் அதில் தேன் மற்றும் க்ரீன் டீ பேக்ஸை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
 • 3.ஒரு டம்ளரில் நறுக்கிய பாதாமை போட்டு, அத்துடன் கொதிக்க வைத்த கலவையை சேர்க்கவும்.
 • 4.இப்போது காஷ்மிரின் பாரம்பரிய தேனீர் தயார்.
Nutritional Information
 • N/ACarbs
 • 19.4gFats
 • N/ACholestrol
 • 6.8gProtien
 • N/AFiber
Calories: 279 0Saturated Fats: 1.7 gMonounsaturated Fats: 19.6 gPolyunsaturated Fats: 5.7 g
Key Ingredients: க்ரீன் டீ பேக்ஸ், நறுக்கிய பாதாம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, தேன், குங்குமப்பு
Comments

Advertisement
Advertisement