மல்டிகிரைன் முறுக்கு ரெசிபி (Baked Multigrain Murukku Tamail Recipe)

 
விமர்சனம் எழுத
 • மல்டிகிரைன் முறுக்கு
 • மல்டிகிரைன் முறுக்கு
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ராகி, ஓட்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய மூன்றும் கொண்டு தயார் செய்யப்படும் இந்த முறுக்கு உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்தியாவின் தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் மிகவும் பெயர் போன சிற்றுண்டி. பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் எல்லா நாட்களும் கிடைக்க கூடியதுதான் இந்த முறுக்கு. எண்ணெயில் வறுத்து எடுக்கும் தின்பண்டங்கள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்க கூடியதாக இருந்தாலும், இந்த முறுக்கு மட்டும் ஆரோக்கிய பதார்த்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. பொதுவாக முறுக்கு அரிசி மாவில் தான் செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை கருதி இந்த முறுக்கு ராகியில் செய்யப்படுவதால் மாலை நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து சூடான தேநீருடன் சாப்பிடலாம்.

மல்டிகிரைன் முறுக்கு சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/4 கப் ஓட்ஸ்
 • 1/4 கப் ராகி மாவு
 • 1/4 கப் கோதுமை மாவு
 • 1/4 கப் அரிசி மாவு
 • 2 மேஜைக்கரண்டி உளுந்து
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2 பச்சை மிளகாய்
 • 1 inch piece இஞ்சி
 • சுவைக்க உப்பு
 • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்

மல்டிகிரைன் முறுக்கு எப்படி செய்வது

 • 1.முதலில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நன்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 2.அடுப்பில் வாணலியை வைத்து, அதில் ஓட்ஸ் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். ஆறியபின் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
 • 3.அதேபோல் உளுத்தம் பருப்பையும் வறுத்து அரைக்கவும்.
 • 4.இப்போது அரைத்த உளுந்து, ஓட்ஸ், ராகி மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு ஆகிய நான்கையும் ஒன்றாக கொட்டி கிளறவும். பின் அதனை சலிக்கவும். சலித்த மாவில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் இஞ்சி விழுதை சேர்க்கவும்.
 • 5.எண்ணெய்யை சூடு படுத்தி அதை இந்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
 • 6.பின் முறுக்கு பிழியும் கருவியில் மாவை போட்டு பேக்கிங் ட்ரேயில் பிழிந்து 180 டிகிரியில் சூடேற்றப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் மல்டிகிரைன் முறுக்கு.
 • 7.முறுக்கு வெந்தவுடன் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கலாம்.
Key Ingredients: ஓட்ஸ், ராகி மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு , உளுந்து, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு , எண்ணெய்
Comments

Advertisement
Advertisement