பேக்டு நமக் பரா ரெசிபி (Baked Namak Para Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • பேக்டு நமக் பரா
 • பேக்டு நமக் பரா
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மைதாவுடன் கோதுமை மற்றும் ரவை சேர்த்து மொருமொருப்பாக செய்யப்படும் இந்த மாலை நேர சிற்றுண்டி சூடான டீயுடன் சேர்த்து சாப்பிட விரும்பாத ஆட்களே இருக்க முடியாது. இந்த சிற்றுண்டியை வீட்டிலேயே எப்படி செய்வதென்பது குறித்து பார்ப்போம்.

பேக்டு நமக் பரா சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 1/2 கப் கோதுமை மாவு
 • 1/2 கப் மைதா
 • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
 • 1/2 கப் நெய்
 • சுவைக்க உப்பு
 • 1/2 தேக்கரண்டி ஓமம்

பேக்டு நமக் பரா எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் மைதா, கோதுமை மற்றும் பேக்கிங் பௌடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • 2.அதில் உப்பு மற்றும் பொடித்து வைத்த ஓமத்தை சேர்க்கவும். அதில் தேவையான அளவு குளிர்ந்த நீர் ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
 • 3.ஒரு துணி கொண்டு பிசைந்து வைத்த மாவை மூடி வைக்கவும். மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
 • 4.பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி மாவு போல் நன்கு தேய்த்து கொள்ளவும்.
 • 5.பேக்கிங் ட்ரேயில் சிறிதளவு எண்ணெய் தடவி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை டயமண்ட் வடிவத்தில் வெட்டி வைக்கவும்.
 • 6.பேக்கிங் ட்ரேயில் இவற்றை வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.
 • 7.ஆறவைத்து அல்லது சூடாகவோ சாப்பிடலாம். காற்றுபுகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.
Key Ingredients: கோதுமை மாவு, மைதா, பேக்கிங் பௌடர், நெய், உப்பு, ஓமம்
Comments

Advertisement
Advertisement