பேக்டு ஷன்கர்பளி ரெசிபி (Baked Shankarpali Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • பேக்டு ஷன்கர்பளி
 • பேக்டு ஷன்கர்பளி
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் பிரபலமான இனிப்பு பதார்த்தம். இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவையும் கலந்திருக்கும். திபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. டீக்கு பொருத்தமான சிற்றுண்டி.

பேக்டு ஷன்கர்பளி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் கோதுமை மாவு
 • 1/2 கப் மைதா
 • 3-4 பூண்டு
 • சுவைக்க உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
 • 1/2 தேக்கரண்டி சீரக தூள்
 • 1/2 கப் தக்காளி விழுது
 • 2 மேஜைக்கரண்டி நெய்

பேக்டு ஷன்கர்பளி எப்படி செய்வது

 • 1.மைக்ரோவேவ் அவனை 160 டிகிரியின் ப்ரீஹீட் செய்து வைக்கவும்.
 • 2.ஒரு பௌலில் கோதுமை மற்றும் மைதாவை போட்டு, அதில் நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், தக்காளி விழுது, நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
 • 3.சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன் மேல் ஈரத்துணியை போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவேண்டும்.
 • 4.மாவை மெல்லிசாக உருட்டாமல் கொஞ்சம் மொத்தமாக உருட்டவும்.
 • 5.மாவை தேய்த்து, முக்கோண வடிவில் வெட்டி பேக்கிங் ட்ரேவில் வைக்கவும்.
 • 6.பின் பேக்கிங் ட்ரேவை மைக்ரோவேவ் அவனில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
 • 7.மொருமொருப்பாக இருக்க 5 நிமிடங்கள் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.
 • 8.சூடு குறைந்ததும் காத்து புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து வேண்டியபோது சாப்பிடலாம்.
Key Ingredients: கோதுமை மாவு, மைதா, பூண்டு, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், தக்காளி விழுது, நெய்
Comments

Advertisement
Advertisement