பாசந்தி புலாவ் ரெசிபி (Basanti Pulao Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
பாசந்தி புலாவ்
 • சமையல்காரர்: Sayari Das - Expert at Momspresso
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பாசந்தி புலாவ் பண்டிகை காலத்தில் செய்து மகிழ கூடிய சிறப்பு உணவுகளில் ஒன்றாகும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாசந்தி புலாவ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 கப் அரிசி
 • 30 முந்திரி
 • 30 உலர்ந்த திராட்சை
 • 4 inch பட்டை
 • 2 ஏலக்காய்
 • 3 கிராம்பு
 • 3 Bay leaves
 • 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 2 தேக்கரண்டி இஞ்சி, துருவிய
 • 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
 • 2 மேஜைக்கரண்டி நெய்
 • எண்ணெய்

பாசந்தி புலாவ் எப்படி செய்வது

 • 1.அரிசியை சுத்தம் செய்து நன்கு கழுவி, தண்ணீரை வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.
 • 2.அரிசியில் நெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 • 3.ஒரு சின்ன கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 4.கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, அதில் பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • 5.இஞ்சியை துருவி அல்லது பேஸ்ட் போல் அரைத்து சேர்த்து கொள்ளவும்.
 • 6.அதில் அரிசியை போட்டு, அதில் ஆறு கப் வெந்நீர் ஊற்றி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
 • 7.தண்ணீர் வற்றி சாதம் நன்கு வெந்தபின் அதில் வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கொள்ளவும்.
 • 8.அதில் நெய் ஊற்றி, மூடி வைக்கவும்.
 • 9.சூடான பாசந்தி புலாவ் தயார்.
Key Ingredients: அரிசி, முந்திரி, உலர்ந்த திராட்சை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, Bay leaves, மஞ்சள் தூள், இஞ்சி, சர்க்கரை, நெய், எண்ணெய்
Comments

Advertisement
Advertisement