பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெசிபி (Butter Scotch Cookies Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ்
 • சமையல்காரர்: Rudolph Almeida - AAK Kamani
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மாலை நேரத்தில் சூடான டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், பட்டர் ஆகியவற்றின் சுவையுடன் இருக்கும் இந்த மொருமொருப்பான குக்கீயில் முட்டை சேர்க்கப்படவில்லை. 20 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான குக்கீஸை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.

பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 கிராம் மைதா
 • 500 கிராம் சர்க்கரை
 • 600 கிராம் வெண்ணெய்
 • 30 கிராம் பால் பௌடர்
 • 25 கிராம் கஸ்டர்ட் பௌடர்
 • 100 கிராம் பால்
 • 200 கிராம் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ்

பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் எப்படி செய்வது

 • 1.மைதா, சர்க்கரை, பால் பௌடர், பால், கஸ்டர்ட் பௌடர், பட்டர் மற்றும் பால் பௌடர் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
 • 2.இந்த மாவில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் சேர்த்து தேய்த்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
 • 3.175 டிகிரியில் 18 முதல் 20 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தால் பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெடி.
Key Ingredients: மைதா, சர்க்கரை, வெண்ணெய், பால் பௌடர், கஸ்டர்ட் பௌடர், பால், பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement