முந்திரியில் செய்யப்படும் இந்த குக்கீஸில் புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் செய்கிறது. இதில் ஃப்ளக்ஸ் சீட் மற்றும் ஓட்ஸ் சேர்ப்பதால் கூடுதலாக ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த குக்கீஸை இப்படி செய்து பாருங்கள்.
கேஷ்யூ நட் குக்கீஸ் சமைக்க தேவையான பொருட்கள்
112 கிராம் முந்திரி பேஸ்ட்
3/4 கப் நெய்
1 1/2 கப் காண்ட்
20 கிராம் சியா விதைகள்
3 மேஜைக்கரண்டி யோகர்ட்
1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி வென்னிலா
1 3/4 கப் ஓட்ஸ்
2 கப் மைதா
கேஷ்யூ நட் குக்கீஸ் எப்படி செய்வது
1.ஒரு பெரிய பௌலில் முந்திரி பேஸ்ட், பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர், சியா விதைகள், யோகர்ட், வென்னிலா, ஓட்ஸ் மற்றும் சர்க்கரைக்கு பதிலாக காண்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2.இத்துடன் சிறிதளவு மைதா சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்து கொள்ளவும்.
3.இந்த மாவை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
4.இப்போது மைக்ரோவேவ் அவனை 160 டிகிரியில் ப்ரீஹீட் செய்யவும். இந்த மாவை ஒரு இன்ச் வரை உருட்டி கொள்ளவும்.
5.ஒரு ட்ரேயில் குக்கீ ஷீட் வைத்து அதில் இந்த உருட்டி வைத்ததை வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.