செட்டிநாடு சிக்கன் ரெசிபி (Chicken Chettinad Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
செட்டிநாடு சிக்கன்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 8
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

தென்னிந்தியாவின் பிரபலமான உணவு தான் இந்த செட்டிநாடு சிக்கன். செட்டிநாடு சிக்கனின் ருசி அலாதியானது. அதற்கென்று தனி பக்குவமும், மணமும் ருசியை உயர்த்தி கொடுக்கும்.

செட்டிநாடு சிக்கன் சமைக்க தேவையான பொருட்கள்

 • சிக்கன் – 1 கிலோ
 • காய்ந்த மிளகாய் – 2
 • பூண்டு – 5 பற்கள்
 • சோம்பு – 1 தேக்கரண்டி
 • சீரகம் – 1 தேக்கரண்டி
 • மிளகு – 2 மேஜைக்கரண்டி
 • கிராம்பு – 4
 • பட்டை – 1
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
 • பொடியாக நறுக்கிய தக்காளி – 1
 • எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

செட்டிநாடு சிக்கன் எப்படி செய்வது

 • 1.காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
 • 2.வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும்.
 • 3.பொறிந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின் அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
 • 4.பின் அரைத்து வைத்த மசாலா விழுதை அத்துடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கிளரவும்.
 • 5.அதில் சிக்கனை சேர்த்து கிளரி வேகவிடவும்.
 • 6.மசாலாவுடன் சிக்கனும் சேர்ந்து நன்கு வெந்தவுடன் சூடாக பரிமாறாவும்.

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement