சிக்கன் பாப்கார்ன் ரெசிபி (Chicken Popcorn Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சிக்கன் பாப்கார்ன்
  • சமையல்காரர்: Manoj Pandey
  • Restaurant: Duty Free
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மசாலா கலவை மற்றும் மிளகாய் சேர்த்து செய்யப்படும் சிக்கன் பாப்கார்ன் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த உணவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.

சிக்கன் பாப்கார்ன் சமைக்க தேவையான பொருட்கள்

  • 250 gms சிக்கன்
  • 2 மேஜைக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  • 1 முட்டை
  • 1 கப் ப்ரட் க்ரம்ப்ஸ்
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 3/4 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி வெங்காய பொடி
  • 3/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • எண்ணெய்

சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வது

  • 1.ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு, இஞ்சு பூண்டு விழுது, மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • 2.நன்கு கலந்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளவும்.
  • 3.சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • 4.வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • 5.அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.
  • 6.மேலும் அதில் முட்டை அல்லது மோர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • 7.ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த ப்ரட் க்ரம்பில் தொட்டு எடுக்கவும்.
  • 8.பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • 9.எண்ணெய் சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
  • 10.மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  • 11.பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.
  • 12.பின் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: சிக்கன், கார்ன் ஃப்ளார், முட்டை, ப்ரட் க்ரம்ப்ஸ், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, வெங்காய பொடி, மிளகாய் தூள், எண்ணெய்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement