மேங்கோ சூப் ரெசிபி (Chilled Mango Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மேங்கோ சூப்
 • சமையல்காரர்: Sudhir Nair - Courtyard Bengaluru - Outer Ring Road
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றுடன் புதினா மற்றும் எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பாருங்கள்.

மேங்கோ சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 கிராம் மாம்பழம்
 • 1 வெள்ளரிக்காய்
 • 50 கிராம் வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 தக்காளி, நறுக்கப்பட்ட
 • 5 கிராம் பூண்டு
 • 20 மில்லி லிட்டர் ஆலிவ் எண்ணெய்
 • 1 எலுமிச்சை
 • 3 கிராம் புதினா, பொடியாக நறுக்கப்பட்ட
 • 25 கிராம் சர்க்கரை
 • சுவைக்க உப்பு மற்றும் மிளகு

மேங்கோ சூப் எப்படி செய்வது

 • 1.மிக்ஸியில் மாம்பழம், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 2.அரைக்கும் போது கூடவே ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
 • 3.அத்துடன் எலுமிச்சை சாறு, புதினா, சர்க்கரை மற்றும் 150 மிலி தண்ணீர் சேர்க்கவும்.
 • 4.பின் அதில் உப்பு மற்றும் மிளகு தூவவும்.
 • 5.பொடியாக நறுக்கிய புதினாவை தூவி குளிர வைத்து பரிமாறலாம்.
Key Ingredients: மாம்பழம், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, பூண்டு, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை, புதினா, சர்க்கரை, உப்பு மற்றும் மிளகு
Comments

Advertisement
Advertisement