சாக்லேட் அப்போ ரெசிபி (Chocolate Appo Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சாக்லேட் அப்போ
 • சமையல்காரர்: Executive Chef Vivek Kalia
 • ரெசிபி பரிமாற: 20
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

அரிசி, துருவிய தேங்காய், பட்டை மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

சாக்லேட் அப்போ சமைக்க தேவையான பொருட்கள்

 • 3/4 கப் அரிசி
 • 3 மேஜைக்கரண்டி தேங்காய், துருவிய
 • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1 தேக்கரண்டி வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்
 • 1/2 தேக்கரண்டி பட்டை தூள்
 • 1/4 கப் நாட்டு சர்க்கரை
 • 1/4 கப் கோகோ பவுடர்
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 3 மேஜைக்கரண்டி சாக்லேட் சிப்ஸ்
 • 2-3 மேஜைக்கரண்டி வெண்ணெய்

சாக்லேட் அப்போ எப்படி செய்வது

 • 1.அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
 • 2.தண்ணீரை வடிகட்டி அரைத்து கொள்ளவும்.
 • 3.அரிசி மாவில் துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
 • 4.இதனை ஒரு பௌலில் மாற்றி, அதில் வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், பட்டை தூள், சர்க்கரை, கோகோ பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 5.இந்த கலவையை 20-30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
 • 6.பயன்படுத்துவதற்கு முன் அதில் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 7.அப்பம் தயாரிக்கும் பேனை சூடுப்படுத்தி அதில் வெண்ணெய் அல்லது நெய் அல்லது எண்ணெய் தடவி வைக்கவும்.
 • 8.ஒரு கரண்டி மாவை எடுத்து இதில் ஊற்றி அதன் மேல் 3-4 சாக்லேட் சிப்ஸ் தூவி மீண்டும் அதன் மேல் சிறிது மாவு ஊற்றி அப்பம் தயாரிக்கவும்.
 • 9.இரண்டு நிமிடங்கள் வரை மூடிவைத்து வேகவிடவும்.
 • 10.அப்பத்தின் ஓரங்கள் முறுகலாக வந்ததும் அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
 • 11.அதேபோல் அடுத்தடுத்து அப்பங்களை தயாரிக்கவும்.
 • 12.அப்பத்தை இன்னும் ருசியாக்க அதில் சாக்லேட் பவுடர், ரவை அல்லது தேங்காய் பவுடர் சேர்க்கலாம்.
 • 13.இப்போது சூடான சாக்லேட் அப்பம் தயார்.
Key Ingredients: அரிசி, தேங்காய், பேக்கிங் பவுடர், வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், பட்டை தூள், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர், உப்பு, சாக்லேட் சிப்ஸ், வெண்ணெய்
Comments

Advertisement
Advertisement