சாக்லேட் காஜு கத்லி ரெசிபி (Chocolate Kaju Katli - Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
சாக்லேட் காஜு கத்லி
  • சமையல்காரர்: Nitish Chopra - Aloft New Delhi Aerocity
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பொதுவாக காது கத்லி எல்லோருக்கும் பிடித்தமானது. இத்துடன் சாக்லேட் சேர்த்து எப்படி சாக்லேட் காஜு கத்லி செய்வது என்று பார்ப்போம்.

சாக்லேட் காஜு கத்லி சமைக்க தேவையான பொருட்கள்

  • 2 1/4 கப் முந்திரி
  • 1 கப் சர்க்கரை
  • 100 மில்லி லிட்டர் தண்ணீர்
  • 1 கப் டார்க் சாக்லேட்

சாக்லேட் காஜு கத்லி எப்படி செய்வது

  • 1.முதலில் முந்திரியை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  • 2.அடிகணமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை மிதமான சூட்டில் வைத்திருக்கவும்.
  • 3.சர்க்கரை பாகு ஒரு நூல் பதத்திற்கு வரும்வரை அதனை காய்ச்சி, 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  • 4.அரைத்து வைத்த முந்திரியை சர்க்கரை பாகுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கெட்டியாக வரும்வரை கிளறி கொண்டே இருக்கவும்.
  • 5.அடுப்பை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஆற வைக்கவும். பின் கைகளில் நெய் தடவி கொண்டு இந்த மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
  • 6.ஒரு பட்டர் ஷீட்டில் இந்த மாவை வைத்து ரோல் செய்து 5-6 மிமீ வரை உருட்டி கொள்ளவும்.
  • 7.ஒரு சாஸ்பேனில் ஹீட்ப்ரூஃப் பௌல் வைத்து அதில் சாக்லேட் சேர்த்து உருக்கி கொள்ளவும்.
  • 8.சாக்லேட் உருகியதும் காஜூ கத்லி மாவில் இதனை சேர்த்து சமமாக பரப்பி கொள்ளவும்.
  • 9.ஆறியபின் இதனை ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடன்கள் வரை வைக்கவும்.
  • 10.பின் இதனை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
Key Ingredients: முந்திரி, சர்க்கரை, தண்ணீர், டார்க் சாக்லேட்
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com