சாக்லேட் பீட்சா ரெசிபி (Chocolate Pizza Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சாக்லேட் பீட்சா
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சாக்லேட், நட்ஸ், நறுக்கிய ஸ்ட்ராபெர்ரீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பான பீட்சா எல்லோருக்கும் பிடித்தமான டெசர்டாக இருக்கிறது. இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சாக்லேட் பீட்சா சமைக்க தேவையான பொருட்கள்

 • பீட்சா மாவு
 • 200 கிராம் சாக்லேட்
 • 2 மேஜைக்கரண்டி வால்நட், நறுக்கப்பட்ட
 • 2 மேஜைக்கரண்டி பாதாம், நறுக்கப்பட்ட
 • 2 மேஜைக்கரண்டி முந்திரி, நறுக்கப்பட்ட
 • 2 மேஜைக்கரண்டி பால்
 • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி பொடித்த சர்க்கரை
 • 2 மேஜைக்கரண்டி ஸ்ட்ராபெர்ரீஸ், நறுக்கப்பட்ட

சாக்லேட் பீட்சா எப்படி செய்வது

 • 1.பீட்சா மாவை தேய்த்து, அதனை 180 டிகிரியில் வைத்து பொன்னிறமாக வரும்வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும்.
 • 2.மைக்ரோவேவ் ப்ரூஃப் பௌலில் சாக்லேட், பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை அவனில் வைத்து எடுக்கவும்.
 • 3.நறுக்கி வைத்த பாதாம், வால்நட் மற்றும் முந்திரி ஆகியவற்றை இந்த கலவையுடன் சேர்த்து மீண்டும் 10 வினாடிகள் வைக்கவும்.
 • 4.பின் இந்த கலவையை பீட்சா மேல் தடவி மீண்டும் 1-2 நிமிடங்கள் 180 டிகிரியில் வைத்து எடுக்கவும்.
 • 5.அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். மேலும் அதன் மேல் பொடித்த சர்க்கரையை தூவி அலங்கரிக்கவும்.
 • 6.இதனை குளிர வைத்தோ அல்லது சூடாகவோ சாப்பிடலாம்.
Key Ingredients: பீட்சா மாவு,
Comments

Advertisement
Advertisement