சாக்லேட் சமோசா ரெசிபி (Chocolate Samosa Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சாக்லேட் சமோசா
 • சமையல்காரர்: Ajay Anand - Pullman and Novotel New Delhi Aerocity
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

சாக்லேட் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மொருமொருப்பான சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பண்டிகை காலத்தில் உண்டு மகிழ சிறப்பான இனிப்பு பலகாரம். இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சாக்லேட் சமோசா சமைக்க தேவையான பொருட்கள்

 • மாவு தயாரிக்க:
 • 1 கிலோகிராம் ரிஃபைண்டு ப்ளோர்
 • 350 gms நெய்
 • 10 gms கருப்பு ஏலக்காய் விதை
 • ஸ்டஃப் செய்ய:
 • 500 gms சாக்லேட்
 • 250 gms பாதாம், வறுக்கப்பட்ட
 • 250 gms முந்திரி, வறுக்கப்பட்ட
 • 100 gms பிஸ்தா, வறுக்கப்பட்ட
 • 1 கிலோகிராம் சர்க்கரை
 • 2.5 gms கரம் மசாலா பொடி
 • வறுக்க எண்ணெய்

சாக்லேட் சமோசா எப்படி செய்வது

 • 1.மாவு, நெய் மற்றும் ஏலக்காய் விதை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • 2.அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 3.சமோசா உள்ளே ஸ்டஃப் செய்ய முதலில் சாக்லேட்டை உருக்கி வைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸை சேர்த்து கொள்ளவும்.
 • 4.சிறு உருண்டைகளாக உருட்டை வைத்து கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையும் குறைந்த பட்சம் 30 கிராம் அளவு இருக்க வேண்டும். பின் இந்த மாவை நன்கு தேய்த்து கொள்ளவும்.
 • 5.இடையில் வெட்டி அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.
 • 6.அதனுள் உருக்கி வைத்த சாக்லேட்டை ஊற்றி தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.
 • 7.அனைத்து ஓரங்களையும் நன்றாக மூடி வைக்கவும்.
 • 8.இப்போது எல்லா ஓரங்களும் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.
 • 9.சமோசாவை நன்கு வடிவமாக செய்து எடுத்து வையுங்கள்.
 • 10.அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
 • 11.அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
 • 12.பாதி அளவு வெந்தபின் வெப்பத்தை அதிகரித்து மொருமொருப்பாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
 • 13.அதனை ஒரு கிட்சன் டவலில் வைக்கவும்.
 • 14.இப்போது சூடான சாக்லேட் சமோசா தயார்.
Key Ingredients: ரிஃபைண்டு ப்ளோர், நெய், கருப்பு ஏலக்காய் விதை, சாக்லேட், பாதாம், முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, கரம் மசாலா பொடி, எண்ணெய்
Comments

Advertisement
Advertisement