கம்ப்ரஸ்டு மெலான் ஸ்லைடர்ஸ் ரெசிபி (Compressed Melon Sliders Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கம்ப்ரஸ்டு மெலான் ஸ்லைடர்ஸ்
 • சமையல்காரர்: Sareen Madhiyan - Tappa Kamala Mills
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

தர்பூசணி, முளைக்கட்டிய தானியங்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ஆரோக்கியமான ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

கம்ப்ரஸ்டு மெலான் ஸ்லைடர்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 150 கிராம் தர்பூசணி
 • 100 கிராம் முளைக்கட்டிய தானியம்
 • 50 கிராம் புளி சட்னி
 • 30 கிராம் புதினா சட்னி
 • 100 கிராம் யோகர்ட்
 • 20 கிராம் கீரை
 • தர்பூசணி சாறு
 • 5 கிராம் சோயா லெசிதின்

கம்ப்ரஸ்டு மெலான் ஸ்லைடர்ஸ் எப்படி செய்வது

 • 1.தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு இரண்டு இன்ச் அளவில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
 • 2.முளைக்கட்டிய தானியங்களை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும்.
 • 3.யோகர்ட் ஃபோம் வருவதற்கு க்ரீம் சைஃபான் பயன்படுத்தவும்.
 • 4.புதினா மற்றும் புளி சட்னியை இந்த முளைக்கட்டிய பயிறுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 5.இந்த கலவையை தர்பூசணியின் மேல் வைக்கவும்.
 • 6.யோகர்ட் ஃபோமையும் அதன் மேல் ஊற்றவும்.
 • 7.தர்பூசணி சாறு மற்றும் சோயா லெசிதின் பவுடர் கொண்டு வாட்டர்மெலான் ஃபோம் தயாரிக்கவும்.
 • 8.இந்த ஃபோமை தர்பூசணியின் மேல் வைத்து பரிமாறவும்.
 • 9.கீரைகள் கொண்டு அலங்கரிக்கலாம்.
Key Ingredients: தர்பூசணி, முளைக்கட்டிய தானியம், புளி சட்னி, புதினா சட்னி, யோகர்ட், கீரை, தர்பூசணி சாறு, சோயா லெசிதின்
Comments

Advertisement
Advertisement