கார்ன் மற்றும் காலிஃப்ளவர் சூப் ரெசிபி (Corn & Cauliflower Soup Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
கார்ன் மற்றும் காலிஃப்ளவர் சூப்
  • சமையல்காரர்: Meenakshi Kapur
  • ரெசிபி பரிமாற: 4
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

சோளம் மற்றும் காலிஃப்ளவர் இரண்டையும் சேர்த்து கெட்டியாகவும் க்ரீமியாகவும் எப்படி ருசியான சூப் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

கார்ன் மற்றும் காலிஃப்ளவர் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

  • 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 4-5 பூண்டு பற்கள்
  • 2 கப் காலிஃப்ளவர்
  • 1 கப் கார்ன்
  • 1 மேஜைக்கரண்டி முந்திரி பேஸ்ட்
  • 2 க்ளாஸ் தண்ணீர்
  • 1 ஸ்லைஸ் ப்ரெட்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • உப்பு சுவைக்கேற்ப

கார்ன் மற்றும் காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வது

  • 1.அடுப்பில் கடாய் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  • 2.அத்துடன் காலிஃப்ளவர சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வேக வைத்து கொள்ளவும்.
  • 3.அதில் முந்திரி பேஸ்டை சேர்த்து கிளறி, பின் கார்ன் மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
  • 4.மிதமான சூட்டில் வேக வைத்து, பின் இறக்கி வைக்கவும்
  • 5.இவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் அதில் ப்ரெட் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
  • 6.இப்போது இந்த பேஸ்டை ஒரு பேனில் மாற்றி மிதமான சூட்டில் வைத்து, பால், மிளகு தூள், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • 7.நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • 8.பின் கார்ன் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement