க்ரீம் ஆஃப் ப்ரோகோலி ரெசிபி (Cream of Broccoli Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
க்ரீம் ஆஃப் ப்ரோகோலி
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இந்த க்ரீமி ப்ரோகோலி சூப் ஆரோக்கியம் நிறைந்தது. இதனை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

க்ரீம் ஆஃப் ப்ரோகோலி சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 கிராம் நறுக்கிய ப்ரோகோலி
 • 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • 2 மேஜைக்கரண்டி மைதா
 • 1/4 தேக்கரண்டி மிளகு தூள்
 • 3/4 கப் பால்
 • 4 கப் தண்ணீர்
 • 1/2 தேக்கரண்டி செலரி
 • 2 தேக்கரண்டி உப்பு
 • for garnishing க்ரீம்

க்ரீம் ஆஃப் ப்ரோகோலி எப்படி செய்வது

 • 1.ஒரு அடிகணமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
 • 2.வெண்ணெய் உருகியதும், வெட்டி வைத்த ப்ரோகோலி பாதி சேர்க்கவும்.
 • 3.அடுப்பை சிம்மில் வைத்து, சில நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
 • 4.அத்துடன் மைதா சேர்த்து நன்கு வறுக்கவும்.
 • 5.அடுப்பை நிறுத்திவிட்டு, அதில் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறிவிடவும்.
 • 6.ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.
 • 7.மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து, மீதமுள்ள ப்ரோகோலி, பால், மிளகு தூள் மற்றும் செலரி சேர்க்கவும்.
 • 8.பின் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
 • 9.க்ரீம் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement