தால் கசோரி ரெசிபி (Dal Kachori Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • தால் கசோரி
 • தால் கசோரி
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 5
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற இந்த இனிப்பு வகை மைதா, பேக்கிங் பவுடர், பருப்பு மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மிகவும் மொருமொருப்பாகவும் மேலும் மேலும் சுவைக்க தூண்டும் வகையில் இருக்கும் இந்த பலகாரம் வட இந்தியாவில் சிறப்பு வாய்ந்த ஸ்நாக்ஸ்.

தால் கசோரி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் பாசிப்பருப்பு (5-6 மணி நேரம் ஊறவைத்தது)
 • 2 மேஜைக்கரண்டி வெஜிடபிள் ஆயில்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/8 தேக்கரண்டி பெருங்காயம்
 • 2 தேக்கரண்டி பச்சை மிளகாய்
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1 தேக்கரண்டி கசகசா
 • 2 மேஜைக்கரண்டி புளி கரைசல்
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • இஞ்சி
 • கரம் மசாலா
 • தேங்காய்
 • மாவு தயாரிக்க:
 • 1 கப் மைதா
 • 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்
 • 1/4 தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • வறுக்க எண்ணெய்

தால் கசோரி எப்படி செய்வது

 • 1.ஊறவைத்த பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். சுடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
 • 3.அதில் அரைத்து வைத்த பருப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், கசகசா, தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின் அதில் ¼ கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். அத்துடன் புளி கரைசல் மற்றும் சர்க்கரை சேர்த்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 4.மைதா, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பின் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
 • 5.வால்நட் அளவிற்கு மாவை உருட்டி கொள்ளவும்.
 • 6.பிசைந்து வைத்த மாவை வால் அளவிற்கு நடுப்பகுதியை மட்டும் கெட்டியாக இருக்கும்படி வைத்து விட்டு சுற்றியுள்ள பகுதியை சற்று மெல்லிசாக இருக்கும்படி வைத்து கொள்ளவும்.
 • 7.வேக வைத்த பொருட்களை உள்ளே வைத்து அதன் ஓரங்களை நன்கு மூடி வைக்கவும்.
 • 8.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்த கசோரியை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
Key Ingredients: பாசிப்பருப்பு (5-6 மணி நேரம் ஊறவைத்தது), வெஜிடபிள் ஆயில், சீரகம், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கசகசா, புளி கரைசல், சர்க்கரை, இஞ்சி, கரம் மசாலா, தேங்காய், மைதா, நெய் அல்லது எண்ணெய், பேக்கிங் பௌடர், உப்பு, எண்ணெய்
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com