பிஸ்தா பேரிட்சை கப் கேக் ரெசிபி (Date And Pistachio Muffin Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பிஸ்தா பேரிட்சை கப் கேக்
 • சமையல்காரர்: Janmejay Sachdeva
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டிய கட்டாயம். ஆனால், பிஸ்தா மற்றும் பேரிட்சை பழம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கப் கேக் நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமானது. இதில் உலர்ந்த திராட்சை, ராகி மாவு, கோதுமை மற்றும் சர்க்கரைக்கு பதிலாக காண்ட் எனப்படும் பொருள் சேர்த்து செய்யப்படுகிறது. காலை தேநீருடன் இந்த கப் கேக் சாப்பிடலாம்.

பிஸ்தா பேரிட்சை கப் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/4 கப் நெய்
 • 1 1/4 காண்ட்
 • 1 1/2 ராகி மாவு
 • 3/4 கப் கோதுமை மாவு
 • 2 மேஜைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1 1/2 தேக்கரண்டி ஏலக்காய்
 • 2 தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
 • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • 1 கப் மோர்
 • 1/2 கப் தண்ணீர்
 • 1 கப் பேரிச்சம் பழம்
 • 1 கப் பிஸ்தா

பிஸ்தா பேரிட்சை கப் கேக் எப்படி செய்வது

 • 1.மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.
 • 2.மஃபின் ட்ரேவில் பட்டர் தடவி வைக்கவும்.
 • 3.ஒரு பாத்திரத்தில் நெய், காண்ட் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். க்ரீம் பதத்திற்கு வந்துவிடும்.
 • 4.அத்துடன் ராகி மாவு, கோதுமை மாவு, கார்ன் ஸ்டார்ச், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா மற்றும் பௌடர் என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.
 • 5.இத்துடன் மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலக்கி அதில் வெட்டி வைத்த பேரிட்சம் பழம் மற்றும் பிஸ்தா இரண்டையும் சேர்க்கவும்.
 • 6.ஒரு ஸ்பூனில் எடுத்து பேக்கிங் ட்ரேவில் வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
Key Ingredients: நெய், காண்ட், ராகி மாவு, கோதுமை மாவு, கார்ன் ஸ்டார்ச், உப்பு, ஏலக்காய், பேக்கிங் பௌடர், பேக்கிங் சோடா, மோர், தண்ணீர், பேரிச்சம் பழம், பிஸ்தா
Comments

Advertisement
Advertisement