டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு ரெசிபி (Dates and Nuts Ladoo Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு
 • டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பேரிச்சம் பழம், விதைகள் மற்றும் கொட்டைகள் சேர்த்து செய்யப்படுவதால் இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இவற்றில் இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுந்திருப்பதால் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. குழந்தைகள் மட்டுமின்றி அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த சுவையான இனிப்பு லட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு சமைக்க தேவையான பொருட்கள்

 • 20 பெரிய பேரிச்சம் பழம்
 • 1/4 கப் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, கடலை
 • 1 மேஜைக்கரண்டி உலர்ந்த தேங்காய் துருவல்

டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் பாதாம், முந்திரி, கடலை, பிஸ்தா மற்றும் வால்நட் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். அல்லது மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
 • 2.அதே பாத்திரத்தில் பேரிச்சம் பழத்தை போட்டு நன்கு வேகவிடவும். அல்லது மைக்ரோவேவ் அவனில் 30 முதல் 60 வினாடிகள் வரை வைத்து எடுக்கவும்.
 • 3.அத்துடன் உலர்ந்த துருவிய தேங்காயை சேர்க்கவும்.
 • 4.மிக்ஸியில் பேரிச்சம் பழத்தை போட்டு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 5.வறுத்து வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா, கடலை மற்றும் வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேரிச்சம்பழத்துடன் சேர்த்து கிளறவும்.
 • 6.பின் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 • 7.உருட்டி வைத்ததை உலர்ந்த தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறலாம்.
Key Ingredients: பேரிச்சம் பழம், பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, கடலை, உலர்ந்த தேங்காய் துருவல்
Comments

Advertisement
Advertisement