ட்ரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை ரெசிபி (Dry Fruit Modak Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
ட்ரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பாதாம், முந்திரி, பிஸ்தா, அத்திப்பழம், திராட்சை போன்ற ட்ரை ப்ரூட்களை வறுத்து அரைத்து செய்யும் இந்த மோதகத்தில் எவ்வித செயற்கை இனிப்பும் சேர்க்க தேவையில்லை. மஹாராஷ்டிரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரசாதமாக கொடுக்கப்படும் இது ருசியானது மட்டுமல்லாது ஆரோக்கியமானதும் கூட. இந்த ட்ரை ப்ரூட் கொழுக்கட்டை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

ட்ரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை சமைக்க தேவையான பொருட்கள்

 • 6 அத்திப்பழம்
 • 8 பேரிச்சம்பழம்
 • 15-16 பாதாம்
 • 1 தேக்கரண்டி வால்நட்
 • 12-13 வேர்கடலை
 • 5-6 பிஸ்தா
 • 9-10 முந்திரி
 • 1 தேக்கரண்டி எள்
 • 1 தேக்கரண்டி சாரப் பருப்பு
 • 1 தேக்கரண்டி கசகசா
 • 1 தேக்கரண்டி உலர்ந்த தேங்காய்
 • 1 மேஜைக்கரண்டி நெய்
 • 10 உலர்ந்த திராட்சை, நறுக்கப்பட்ட
 • 5 ஆப்ரிகாட், நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

ட்ரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை எப்படி செய்வது

 • 1.அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை இரண்டு மணிநேரம் தனித்தனியே ஊறவைத்து கொள்ள வேண்டும்.ட்ரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை
 • 2.மிக்ஸியில் பாதாம், கடலை, வால்நட், பிஸ்தா மற்றும் முந்திரியை சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • 3.மற்றொரு கடாயில், எள், சாரப்பருப்பு, கசகசா மற்றும் உலர்ந்த தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
 • 4.ஊறவைத்துள்ள அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு மாவு போல் அரைத்து கொள்ளவும்.
 • 5.இப்போது கடாயில் நெய் ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அத்துடன், நறுக்கி வைத்த திராட்சை மற்றும் ஆப்ரிகாட்டை சேர்த்து நன்கு கிளரவும்.
 • 6.அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். நன்கு மாவு பதத்தில் கெட்டியாக வரும்முன் அதில் ஏலப்பொடியை தூவி நன்கு கிளரி இறக்கவும்.
 • 7.சூடு குறைந்ததும், உங்களுக்கு பிடித்தமான வடிவ அச்சில் இந்த மாவை வைத்து எடுக்கவும்.
 • 8.மேலும் அத்துடன், கார்ன் ப்ளேக்ஸ், ஓட்ஸ் மற்றும் சாக்லேட் சிப்ஸ் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் ருசிக்கேற்ப செய்து சாப்பிடலாம்.
Key Ingredients: அத்திப்பழம், பேரிச்சம்பழம், பாதாம், வால்நட், வேர்கடலை, பிஸ்தா, முந்திரி, எள், சாரப் பருப்பு, கசகசா, உலர்ந்த தேங்காய், நெய், உலர்ந்த திராட்சை, ஆப்ரிகாட், ஏலக்காய் தூள்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement