முட்டை ஃப்ரைடு ரைஸ் ரெசிபி (Egg and Garlic Fried Rice Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சைனீஸ் குசைனின் பிரதானமான உணவு முட்டை ஃப்ரைட் ரைஸ். முறையாக முட்டை ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

முட்டை ஃப்ரைடு ரைஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1 மேஜைக்கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
 • 2 தேக்கரண்டி ஸ்ப்ரிங் ஆனியன், நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி இஞ்சி, நறுக்கப்பட்ட
 • 1 சிவப்பு மிளகாய், நறுக்கப்பட்ட
 • 1 முட்டை
 • 2 கப் சாதம்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகு தூள்
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்

முட்டை ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 2.ஒரு தேக்கரண்டி ஸ்ப்ரிங் ஆனியன், இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 3.முட்டையை உடைத்து இதில் ஊற்றி வேக விடவும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 4.பின் அதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 5.அத்துடன் உப்பு, மிளகு தூள் மற்றும் சோயா சாஸ் ஊற்றி கிளறவும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 6.மேலும் சிறிதளவு ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
 • 7.இதனை ஒரு பௌலில் மாற்றி சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.முட்டை ஃப்ரைடு ரைஸ்
Key Ingredients: எண்ணெய், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், இஞ்சி, சிவப்பு மிளகாய், முட்டை, சாதம், உப்பு, மிளகு தூள், சோயா சாஸ்
Comments

Advertisement
Advertisement