எக்லெஸ் பனானா கேக் ரெசிபி (Eggless Banana Cake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
 • எக்லெஸ் பனானா கேக்
 • எக்லெஸ் பனானா கேக்
 • எக்லெஸ் பனானா கேக்
 • சமையல்காரர்: Vikas Vibhuti
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பிறந்தநாள் மற்றும் திருமண கொண்டாட்டங்களுக்கு கேக் சாப்பிட்டுவந்த நாம் தற்போது எல்லாவற்றிற்கும் கேக் வெட்டி கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். முட்டை மற்றும் செயற்கை ஃப்ளேவர் சேர்க்கப்படாத இந்த பனானா கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

எக்லெஸ் பனானா கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 284 கிராம் மைதா
 • 12 கிராம் பேக்கிங் பவுடர்
 • 5 கிராம் பட்டை தூள்
 • 100 கிராம் வால்நட்
 • 280 கிராம் வாழைப்பழம்
 • 70 கிராம் வெண்ணெய்
 • 100 மில்லி லிட்டர் தயிர்
 • 150 மில்லி லிட்டர் பால்

எக்லெஸ் பனானா கேக் எப்படி செய்வது

 • 1.மைதா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் பட்டை தூள் மற்றும் வால்நட் சேர்த்து கொள்ளவும்.
 • 3.ஒரு பௌலில் வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
 • 4.வாழைப்பழ கலவையுடன் தயிர் சேர்த்து கொள்ளவும்.
 • 5.இந்த கலவையுடன் மைதா மற்றும் பால் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
 • 6.க்ரீஸ் செய்யப்பட்ட டின்னில் இந்த கலவையை ஊற்றவும்.
 • 7.மைக்ரோவேவ் அவனை 170 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து, 50-60 நிமிடங்கள் வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து விடவும்.
 • 8.கேக் பேக் ஆனதும், வையர் ரேக்கில் வைத்து ஆற வைக்கவும்.
 • 9.அதன் மேல் ஐஸிங் சுகரை தூவி பரிமாறவும்.
Key Ingredients: மைதா, பேக்கிங் பவுடர், பட்டை தூள், வால்நட், வாழைப்பழம், வெண்ணெய், தயிர், பால்
Comments

Advertisement
Advertisement