ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ் ரெசிபி (Fried Rice with Soya Chunks Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

சோயாவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம். பிரியாணி மற்றும் க்ரேவியில் சோயாவை சேர்த்து எப்படி ருசியாக சமைப்பது என்று பார்ப்போம்.

ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 கப் பாஸ்மதி அரிசி, நடுத்தரமாக
 • 1 கப் கேரட், நறுக்கப்பட்ட
 • 1 கப் குடைமிளகாய், நறுக்கப்பட்ட
 • 1 கப் பீன்ஸ், நறுக்கப்பட்ட
 • 1 கப் பச்சை பட்டாணி, உரித்த
 • 1/2 தேக்கரண்டி இஞ்சி, நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட
 • 2 பிரியாணி இலை
 • 2 பட்டை
 • 2 ஏலக்காய்
 • 1 கிராம்பு
 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1 கப் சோயா, ப்ரேஸ்ட்
 • 2 மேஜைக்கரண்டி உப்பு
 • ஒரு சிட்டிகை சர்க்கரை

ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ் எப்படி செய்வது

 • 1.ஒரு பேனில் தண்ணீர் ஊற்றி, அதில் சோயா மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 2.அந்த தண்ணீரை வடித்து விட்டு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி, பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 3.மற்றொரு பேனில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 4.அதில் பச்சை பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வேகவிடவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 5.இந்த காய்கறிகளை நன்கு வதக்க வேண்டும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 6.சாதத்தை தனியே வேகவைத்து கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
 • 7.அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 8.சில நிமிடங்கள் அதன் வாசனை வரும்வரை வறுத்து, அதில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 9.பின் அதில் வேகவைத்த சோயாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 10.சில நிமிடங்கள் சோயா மற்றும் காய்கறிகளை மொருமொருப்பு வரும்வரை வதக்கவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 11.அதில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 12.இப்போது வேகவைத்த சாதத்தை சோயா மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.ஃப்ரைடு ரைஸ் வித் சோயா சங்க்ஸ்
 • 13.தற்போது சூடான சுவையான ஃப்ரைடு ரைஸ் தயார்.
Key Ingredients: பாஸ்மதி அரிசி, கேரட், குடைமிளகாய், பீன்ஸ், பச்சை பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோயா, உப்பு,
Comments

Advertisement
Advertisement