பூண்டு மற்றும் பைன்நட் சூப் ரெசிபி (Garlic and Pinenut Soup With Burnt Butter Essence Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பூண்டு மற்றும் பைன்நட் சூப்
பூண்டு மற்றும் பைன்நட்ஸ் சூப் செய்முறை
 • சமையல்காரர்: Ankur
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பூண்டு மற்றும் பைன்நட் சூப் : சூப்பில் லைட்டான வகைகளை விரும்புவீர்கள் என்றால் உங்களுக்கான ரெசிபி இதுதான். பூண்டு தாளித்து பாதாம் பருப்பு மற்றும் கோழி வேக வைத்த தண்ணீருடன் வெள்ளை ஒயினை சேர்த்து தயாரிக்கப்படும் சூப். சூடான சூப்பை பிரட்டுடன் பறிமாறலாம்.

பூண்டு மற்றும் பைன்நட் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 10 பூண்டு
 • 5 பாதாம்
 • 15 gms கொத்தமல்லி
 • 1 பிரிஞ்சி இலை
 • 4 கப் சிக்கன் பிராத்
 • ஒரு சிட்டிகை ஜாதிக்காய்
 • 1 முட்டைக்கரு
 • 1/2 கப் ஹெவி க்ரீம்
 • 2 வெள்ளை நிற பிரட்
 • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • சுவைக்க உப்பு
 • ஒரு சிட்டிகை மிளகு
 • 30 மில்லி லிட்டர் வெள்ளை ஒயின்

பூண்டு மற்றும் பைன்நட் சூப் எப்படி செய்வது

 • 1.பூண்டின் தோலை உரித்து 2 நிமிடம் கொதிக்கும் தண்ணீரியில் வேக வைத்து எடுக்கவும்.
 • 2.அதனுடன் வெள்ளை ஒயின், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து 20 நிமிடம் 140டிகிரி செல்சியஸில் வறுக்கவும்.
 • 3.பாதாமை ப்ளான்ஞ் செய்து அதன் தோலை நீக்கவும்.
 • 4.வறுத்த பூண்டு மற்றும் பாதாமை அரைத்து எடுத்து ப்யூரியாக வைத்துக் கொள்ளவும்.
 • 5.சூடான கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் பூண்டு மற்றும் பாதாம் ப்யூரியை சேர்க்கவும். இப்போது சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து தேவையான பொருட்களில் சொல்லப்பட்ட ஹெர்ப்ஸை நூலில் மொத்தமாக கட்டி உள்ளே போடவும்.
 • 6.நன்றாக சூப்பை கொதிக்க வைக்கவும்.
 • 7.முட்டையின் கரு மற்றும் க்ரீமை ஒன்றாக ஊற்றி கலக்கவும்.
 • 8.இந்தக் கலைவையை சூப்பில் ஊற்றவும். முட்டை திரிந்து போகாமல் இருக்க நன்றாக கலக்கவும்.
 • 9.வெள்ளை நிற பிரட்டை எடுத்து அதை டோஸ்டாகி அதில் வெண்ணையைத் தடவவும்.
 • 10.சூப்பை இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 • 11.பிரட் மற்றும் வெண்ணெய் வைத்து பறிமாறவும்
Key Ingredients: பூண்டு, பாதாம், கொத்தமல்லி, பிரிஞ்சி இலை, சிக்கன் பிராத், ஜாதிக்காய், முட்டைக்கரு, ஹெவி க்ரீம், வெள்ளை நிற பிரட், வெண்ணெய், உப்பு, மிளகு, வெள்ளை ஒயின்
Comments

Advertisement
Advertisement