ஜெர்மன் ஸ்டோலன் ப்ரட் ரெசிபி (German Stollen Bread Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • ஜெர்மன் ஸ்டோலன் ப்ரட்
 • ஜெர்மன் ஸ்டோலன் ப்ரட்
 • Restaurant: Honey and Dough
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வழக்கமான ப்ரட் சாப்பிட்டு சலித்து விட்டதா? இந்த புதுவிதமான ப்ரட்டை இப்படி செய்து பாருங்கள்.

ஜெர்மன் ஸ்டோலன் ப்ரட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 gms மைதா
 • 200 மில்லி லிட்டர் வெந்நீர்
 • 10 gms ஈஸ்ட்
 • 100 gms உலர் திராட்சை, க்ரான்பெர்ரீஸ், சிட்ரஸ் பீல் மற்றும் நட்ஸ்
 • 30 மில்லி லிட்டர் ரம்
 • 50 gms சர்க்கரை
 • 10 gms உப்பு
 • 5 gms பட்டை
 • 2 முட்டை
 • 50 gms வெண்ணெய்
 • 150 gms மார்லிபன்
 • 150 gms உருக்கிய வெண்ணெய்
 • சர்க்கரை

ஜெர்மன் ஸ்டோலன் ப்ரட் எப்படி செய்வது

 • 1.ரம்மில் ட்ரை ஃப்ரூட்களை ஊறவைத்து அத்துடன் பட்டை தூளுடன் சேர்த்து ஊறவைத்து ஒரு மாதம் வரை வைக்கவும்.
 • 2.ஒரு பௌலில் சர்க்கரை,வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 3.அத்துடன் ஈஸ்ட், மைதா, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 4.ரம்மில் ஊறவைத்த நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து கொள்ளவும். அதில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் கலவையை சேர்க்கவும்.
 • 5.இந்த மாவை 15 நிமிடங்கள் வரை தனியே ஊற வைக்கவும்.
 • 6.இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக வெட்டி அதில் மார்லிபன் சேர்த்து மடித்து கொள்ளவும்.
 • 7.ப்ரட்டை ரோல் செய்து அரை வெப்பத்தில் அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
 • 8.ஓடிஜி அவனில் 170 டிகிரியில் 25 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும்.
 • 9.வெந்தபின் ப்ரட்டை வெளியே எடுத்துவிடவும்.
 • 10.அதன் பிரட்டின் மேல் வெண்ணெய் தடவி பொடித்த சர்க்கரை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: மைதா, வெந்நீர், ஈஸ்ட், உலர் திராட்சை, க்ரான்பெர்ரீஸ், சிட்ரஸ் பீல் மற்றும் நட்ஸ், ரம், சர்க்கரை, உப்பு, பட்டை, முட்டை, வெண்ணெய், மார்லிபன், உருக்கிய வெண்ணெய், சர்க்கரை
Comments

Advertisement
Advertisement