இஞ்சி குக்கீஸ் ரெசிபி (Ginger Cookies Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
இஞ்சி குக்கீஸ்
 • சமையல்காரர்: Stephane Calvet
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இஞ்சி குக்கீஸ் ரெசிபி பற்றி: இனிப்பான அதே நேரத்தில் மிகவும் வித்தியாசமான நறுமணம் கொண்டது இஞ்சி குக்கீஸ். தேன் மற்றும் இஞ்சிதான் இந்த குக்கீஸின் சிறப்பு. சில உட்பொருட்கள் மற்றும் சுலபமான வழிமுறைகள் மூலம் இந்த வகை குக்கீஸை செய்து அசத்தலாம். இந்த முட்டையில்லா குக்கீஸை ஒரு டீயுடன் சாப்பிட்டுப் பாருங்கள். அட அட, அப்படியிருக்கும் சுவை.

இஞ்சி குக்கீஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கிலோகிராம் வெண்ணெய்
 • 1 கிலோகிராம் கேஸ்டர் சக்கரை
 • 0.25 கிலோகிராம் ப்ரஷ்ஷான இஞ்சி, துருவிய
 • 0.025 கிலோகிராம் பேக்கிங் பவுடர்
 • 0.05 கிலோகிராம் பேக்கிங் சோடா
 • 0.25 கிலோகிராம் தேன்
 • 1.75 கிலோகிராம் மாவு

இஞ்சி குக்கீஸ் எப்படி செய்வது

 • 1.க்ரீம், வெண்ணெய் மற்றும் சர்க்கரை.
 • 2.தேன் மற்றும் இஞ்சியை சேர்க்கவும்.
 • 3.மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
 • 4.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துப் பிசையவும்.
 • 5.அதிகமாக மிக்சிங் செய்துவிட வேண்டாம். ஃபோல்டு செய்யவும்.
 • 6.இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். விரும்பியது போல் கட் செய்து கொள்ளவும்.
 • 7.180 டிகிரியில் பேக் செய்யவும். பொன்னிறமாக குக்கீஸ் மாறியவுடன் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துவிடவும்.
Key Ingredients: வெண்ணெய், கேஸ்டர் சக்கரை, ப்ரஷ்ஷான இஞ்சி, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, தேன், மாவு

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement