க்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச் ரெசிபி (Grilled Veg Pesto Sandwich Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • க்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச்
 • க்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச்
 • சமையல்காரர்: Munavar Taher Peerzade - BKC DIVE
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எல்லோருக்குமே பிடித்தமாக இருக்கும் இதன் ருசி. சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. காலை உணவாக அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக இதனை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை சாப்பிடும்போது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மற்றும் கவனம் மேம்படும். இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. ஞாபகத்திறனை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

க்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் மஞ்சள் குடைமிளகாய்
 • 1/2 கப் பச்சை குடைமிளகாய்
 • 1/2 கப் சிவப்பு குடைமிளகாய்
 • 1/2 கப் பரங்கிக்காய்
 • 1/2 கப் சிவப்பு பரங்கிக்காய்
 • 1 கப் தக்காளி
 • 2 மேஜைக்கரண்டி பெஸ்டோ சாஸ்
 • 1/2 கப் சீஸ்
 • ஒயிட் சாஸ்
 • சுவைக்க உப்பு
 • 2 தேக்கரண்டி பூண்டு
 • 1 கப் வெங்காயம்
 • 2 தேக்கரண்டி செலரி
 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 2 ப்ரட்
 • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்

க்ரில்டு வெஜ் பெஸ்தோ சாண்ட்விச் எப்படி செய்வது

 • 1.குடை மிளகாய், பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு மற்றும் மஷ்ரூம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும். அத்துடன் மஷ்ரூம் மற்றும் பரங்கிக்காய் சேர்த்து வதக்கவும்.
 • 3.அதில் பெஸ்டோ சாஸ், ஒயிட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். அத்துடன் சீஸ் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
 • 4.அடுப்பை நிறுத்தி விட்டு, வதக்கிய கலவையை தனியே எடுத்து வைக்கவும் அதில் மையோனிஸ் மற்றும் செலரி சேர்த்து கிளறி கொள்ளவும்.
 • 5.ப்ரட் ஸ்லைஸை நன்கு டோஸ்ட் செய்து கொள்ளவும். அதில் வெண்ணெய் தடவி வதக்கி வைத்த காய்கறி கலவையை சேர்க்கவும்.
 • 6.இதனை சாலட் மற்றும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சேர்த்து பரிமாறலாம்.
Key Ingredients: மஞ்சள் குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், பரங்கிக்காய், சிவப்பு பரங்கிக்காய், தக்காளி, பெஸ்டோ சாஸ், சீஸ், ஒயிட் சாஸ், உப்பு, பூண்டு, வெங்காயம், செலரி, எண்ணெய், ப்ரட், வெண்ணெய்
Comments

Advertisement
Advertisement