குலாப் ஜாமுன் ரெசிபி (Gulab Jamun Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
குலாப் ஜாமுன்
 • சமையல்காரர்: Ravi Saxena
 • ரெசிபி பரிமாற: 10
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

இந்தியர்களின் பிரியமான இனிப்பு வகைகளில் ஒன்றுதான் குலாப் ஜாமுன். பனீர் மற்றும் கோவா சேர்த்து சுத்தமான நெய்யில் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் ஊறவைத்து சாப்பிட்டால் இந்த ருசி உங்களை மெய் மறக்க செய்யும்.

குலாப் ஜாமுன் சமைக்க தேவையான பொருட்கள்

 • மாவு தயாரிக்க:
 • 150 கிராம் சென்னா
 • 500 கிராம் தாப் கோயா
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
 • 80 கிராம் ரிஃபைண்டு மாவு
 • சர்க்கரை பாகு
 • 10 மேஜைக்கரண்டி சர்க்கரை
 • ஸ்டஃப் செய்ய:
 • 10 கிராம் பிஸ்தா
 • அலங்கரிக்க:
 • 40 கிராம் பாதாம், நறுக்கப்பட்ட
 • பொரிக்க:
 • எண்ணெய்

குலாப் ஜாமுன் எப்படி செய்வது

 • 1.முதலில் சென்னா, தாப் கோயா, மாவு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • 2.இந்த கலவையை தனியே எடுத்து வைத்துவிட்டு, சர்க்கரை கொண்டு பாகு தயாரிக்க வேண்டும்.
 • 3.பாகு தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பாகு கெட்டியாக வரும்வரை காய்ச்சவும்.
 • 4.சம அளவில் மாவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
 • 5.மாவு உருட்டும் போது அத்துடன் நறுக்கி வைத்த பிஸ்தாவையும் சேர்க்க வேண்டும்.
 • 6.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் உருட்டி வைத்ததை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
 • 7.பொரித்ததும் உடனடியாக சர்க்கரை பாகில் போட்டு விடவும். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது இந்த குலாப் ஜாமுன் சர்க்கரை பாகில் ஊற வேண்டும்.
 • 8.நறுக்கி வைத்த பாதாம் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: சென்னா, தாப் கோயா, ஏலக்காய் தூள், ரிஃபைண்டு மாவு, சர்க்கரை பாகு, சர்க்கரை, பிஸ்தா, பாதாம், எண்ணெய்
Comments

Advertisement
Advertisement