சிம்பிள் ரவா தோசை ரெசிபி (Instant Rava Dosa Recipe)

 
விமர்சனம் எழுத
சிம்பிள் ரவா தோசை
சிம்பிளான ரவா தோசையின் செய்முறை
 • சமையல்காரர்: Alpa Munjal
 • ரெசிபி பரிமாற: 10
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

அரைமணி நேரத்தில் சிம்பிளான ரவா தோசை செய்வதெப்படி என்பது குறித்து பார்ப்போம். அத்துடன் இதனை எப்படி ருசியாக செய்வதென்றும் பார்ப்போம்.

சிம்பிள் ரவா தோசை சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் ரவை
 • 3/4 கப் அரிசி மாவு
 • 1/4 கப் மைதா
 • 1 மேஜைக்கரண்டி தேங்காய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2-3 பச்சை மிளகாய் , நறுக்கப்பட்ட
 • 1/4 கப் கொத்தமல்லி
 • 1/2 நடுத்தரமாக வெங்காயம்
 • As per taste உப்பு
 • 2 3/4 தண்ணீர்
 • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1 மேஜைக்கரண்டி நெய்

சிம்பிள் ரவா தோசை எப்படி செய்வது

 • 1.வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நறுக்கி தனியே வைத்து கொள்ளவும்.
 • 2.ஒரு பெரிய பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரைமணி நேரம் தனியே எடுத்து வைக்கவும்.
 • 3.அரைமணி நேரத்திற்கு பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், சிலேண்ட்ரோ, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை அந்த மாவில் சேர்க்கவும்.
 • 4.ஒரு பெரிய நான்ஸ்டிக் பேனில் சிறிதளவு நெய் தடவி மிதமான சூட்டில் வைக்கவும்.
 • 5.தவா சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவில் தோசை வார்க்கவும்.
 • 6.தவாவில் மாவு ஊற்றி அதில் எண்ணெய் ஊற்றி நன்கு முறுகலாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.
 • 7.ரவா தோசை ஊற்றும்போது மொத்தமாக ஊற்றக்கூடாது. மாவை தண்ணீர் போல கரைத்து தான் ஊற்ற வேண்டும்.
 • 8.இப்போது தோசையை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
 • 9.அடுத்தடுத்த தோசைகளையும் அப்படியே வார்த்து எடுக்கவும்.
 • 10.எண்ணெய் சற்றே அதிகமாக ஊற்றி செய்தால் ருசியாக இருக்கும்.
 • 11.இதனை சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Key Ingredients: ரவை , அரிசி மாவு , மைதா , தேங்காய் , சீரகம் , பச்சை மிளகாய் , கொத்தமல்லி , வெங்காயம் , உப்பு , தண்ணீர் , எண்ணெய் , நெய்
Comments

Advertisement
Advertisement