உடனடி ரவா தோசை ரெசிபி (Instant Rava Dosa Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
உடனடி ரவா தோசை
 • சமையல்காரர்: Alpa Munjal
 • ரெசிபி பரிமாற: 10
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

முப்பதே நிமிடங்களில் ரவா தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு, வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

உடனடி ரவா தோசை சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் ரவை
 • 3/4 கப் அரிசி மாவு
 • 1/4 கப் மைதா
 • 1 மேஜைக்கரண்டி தேங்காய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2-3 பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட
 • 1/4 கப் மல்லித்தூள்
 • 1/2 நடுத்தரமாக வெங்காயம்
 • சுவைக்க உப்பு
 • 2 3/4 தண்ணீர்
 • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1 மேஜைக்கரண்டி நெய்

உடனடி ரவா தோசை எப்படி செய்வது

 • 1.மேற்கூறிய காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 • 2.ஒரு பெரிய பௌலில் ரவை, அரிசி மாவு, மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் தனியே எடுத்து வைக்கவும்.
 • 3.பின் அதில் வெங்காயம்,, பச்சை மிளகாய், சிலாண்ட்ரோ, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 4.ஒரு பெரிய நான்ஸ்டிக் தவா எடுத்து அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
 • 5.தோசை ஊற்றும் போது மெல்லிசாக எடுத்து ஊற்றவும்.
 • 6.அதன் மேல் மற்றும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.
 • 7.தோசையின் ஓரங்கள் முறுகலாக வந்ததும் கருக விடாமல் உடனடியாக எடுத்து விடவும்.
 • 8.தோசையை மறுபக்கம் திருப்பி போட்டு சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
 • 9.பின் எடுத்து அதேபோல் அடுத்தடுத்த தோசைகளை சுட்டு எடுக்கவும்.
 • 10.தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: ரவை, அரிசி மாவு, மைதா, தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மல்லித்தூள், வெங்காயம், உப்பு, தண்ணீர், எண்ணெய், நெய்
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com