வெல்ல ஜாமூன் ரெசிபி (Jaggery Jamun Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வெல்ல ஜாமூன்
 • சமையல்காரர்: Kasiviswanathan Radisson Blu Atria Bengaluru
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

இந்தியாவில் இனிப்பில்லாமல் உணவு நிறைவடையாது. இதில் எப்போதும் ஜாமூனுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதோடு தற்போது நவராத்திரி, தீபாவளி என விழாக்காலம் என்பதால், வெல்லத்தில் எப்படி ஜாமூன் செய்வது என்பதைப் பார்ப்போம்.

வெல்ல ஜாமூன் சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 கிராம் பால் கோவா
 • 175 கிராம் மைதா
 • 1/2 தேக்கரண்டி சோடா உப்பு
 • 5 கிராம் ஏலக்காய் தூள்
 • 2 1/2 கிலோகிராம் வெல்லம்
 • 1 1/2 லிட்டர் தண்ணீர்

வெல்ல ஜாமூன் எப்படி செய்வது

 • 1.மைதா, ஏலக்காய், சோடா, கோவா ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
 • 2.கடாயில் எண்ணெய் ஊற்றி, கோல்டன் நிறம் வரும் வரை உருண்டைகளை பொரித்தெடுக்கவும்.
 • 3.வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
 • 4.எண்ணெய் வடிந்த்தும் ஜாமூன் உருண்டைகளை பாகில் ஊற வைத்து, நட்ஸ் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: பால் கோவா, மைதா, சோடா உப்பு, ஏலக்காய் தூள், வெல்லம், தண்ணீர்
Comments

Advertisement
Advertisement