கால்மி கபாப் ரெசிபி (Kalmi Kebab Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கால்மி கபாப்
 • சமையல்காரர்: Stephen Gomes - Barcode Dwarka
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

கோழியை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது இந்த கபாப். புதினா சட்னி மற்றும் வெங்காயம் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த போன்லெஸ் சிக்கனை வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்கள்.

கால்மி கபாப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 கிராம் கோழி
 • 1/4 கப் தயிர்
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 1/2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 4 தேக்கரண்டி முந்திரி பொடி
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
 • 1/4 தேக்கரண்டி மிளகு
 • 1/4 கப் ஃப்ரஷ் க்ரீம்
 • எண்ணெய்

கால்மி கபாப் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் தயிர் எடுத்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
 • 2.அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், க்ரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
 • 3.எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் தொட்டு எடுத்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 • 4.அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 • 5.புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.
Key Ingredients: கோழி, தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், சீரகம், முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, மிளகு, ஃப்ரஷ் க்ரீம், எண்ணெய்
Comments

Advertisement
Advertisement