கேசரி மோதகம் ரெசிபி (Kesari Modak Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • கேசரி மோதகம்
 • கேசரி மோதகம்
 • சமையல்காரர்: Vipin Kishore - Aloft Aerocity New Delhi
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மகாராஷ்டிரத்தின் பாரம்பரியமான இனிப்பு பண்டம். குங்குமப்பூவின் வாசனையுடன் இருக்கும் இதன் ருசி அலாதியானது. வீட்டிலேயே இதை எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.

கேசரி மோதகம் சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 கிராம் அரிசி மாவு
 • 150 மில்லி லிட்டர் தண்ணீர்
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 30 கிராம் நெய்
 • 150 கிராம் தேங்காய், துருவிய
 • 150 கிராம் வெல்லம்
 • 2 கிராம் ஏலக்காய் பொடி
 • 20 கிராம் முந்திரி, வறுக்கப்பட்ட
 • 15 கிராம் உலர்ந்த திராட்சை
 • 1 கிராம் குங்குமப்பூ

கேசரி மோதகம் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் உப்பு, ஒரு தேக்கரண்டி, குங்குமப்பூ மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
 • 2.ஒரு ஈரத்துணியால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
 • 3.ஒரு கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.
 • 4.எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.
 • 5.கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்த மாவை எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • 6.மாவை கையில் எடுத்து தட்டி அதில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வைத்து கொள்ளவும்.
 • 7.மாவின் உள்ளே இந்த இனிப்பு கலவையை வைத்து அதன் ஓரத்தை மூடிவிட வேண்டும்.
 • 8.இந்த மோதகம் காய்ந்து போகாமல் இருக்க ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
 • 9.இட்லி பானையில் ஒரு இன்ச் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டில் வாழை இலைகளை வைத்து, பிடித்து வைத்த மோதகத்தை அதில் வைக்கவும்.
 • 10.10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.
 • 11.கேசரி மோதகம் தயார்.
Key Ingredients: அரிசி மாவு, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய், வெல்லம், ஏலக்காய் பொடி, முந்திரி, உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement