கேசரி சாபுதானா கிச்சடி ரெசிபி (Kesari Sabudana Khichdi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கேசரி சாபுதானா கிச்சடி
 • சமையல்காரர்: Rajat Panwar - Brew Buddy Gurgaon Sector 29
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கடலை, உருளைக்கிழங்கு, மிளகாய், மசாலா பொருட்கள், குங்குமப்பூ மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் இந்த கிச்சடி ரெசிபி பெரும்பாலும் விசேஷ நாட்களில் செய்யப்படுகிறது. இதை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

கேசரி சாபுதானா கிச்சடி சமைக்க தேவையான பொருட்கள்

 • 440 கிராம் ஜவ்வரிசி
 • 450 மில்லி லிட்டர் தண்ணீர்
 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 3-4 கறிவேப்பிலை
 • 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி, துருவிய
 • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்ட
 • 2 நடுத்தரமாக உருளைக்கிழங்கு, உரித்த
 • 1/2 தேக்கரண்டி குங்குமப்பூ
 • 1/2 கப் கடலை, வறுக்கப்பட்ட
 • சுவைகேற்ப கல் உப்பு
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • அலங்கரிக்க கொத்தமல்லி
 • அலங்கரிக்க எலுமிச்சை

கேசரி சாபுதானா கிச்சடி எப்படி செய்வது

 • 1.ஜவ்வரிசியை நன்கு கழுவி கொள்ளவும்.
 • 2.ஒரு அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதை விட கால் பங்கு அதிகமாகவே தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
 • 3.இரவு 5-6 மணிநேரம் ஊற வைக்கவும்.
 • 4.ஊறவைத்த பின் ஜவ்வரிசி சற்றே பெரிதாகும்.
 • 5.சமைப்பதற்கு முன் தண்ணீரை வடித்து விடுவும்.
 • 6.அடுப்பில் அடிகணமான பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.
 • 7.சூடானதும் சீரகம் சேர்க்கவும்.
 • 8.அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வேகவைக்கவும்.
 • 9.அத்துடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து ஒரு நிமிடன் வதக்கவும்.
 • 10.அதேநேரத்தில், சர்க்கரை, உப்பு, உடைத்த கடலை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
 • 11.இந்த கலவையை மீண்டும் ஒருமுறை ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.
 • 12.அதில் குங்குமப்பூ தூவி நன்கு கிளறி இறக்கி விடவும்.
 • 13.பின் நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி, சிறு துண்டு எலுமிச்சையை வைத்து அலங்கரிக்கவும்.
 • 14.இப்போது சூடான சுவையான ஜவ்வரிசி கிச்சடி தயார்.
Key Ingredients: ஜவ்வரிசி, தண்ணீர், எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, குங்குமப்பூ, கடலை, கல் உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, எலுமிச்சை
Comments

Advertisement
Advertisement