மசாலா ஆம்லெட் ரெசிபி (Masala Omlette Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மசாலா ஆம்லெட்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

முட்டையில் புரதம் நிறைந்திருக்கிறது. முட்டை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மசாலா ஆம்லெட் உங்கள் காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

மசாலா ஆம்லெட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 நறுக்கிய வெங்காயம்
 • 1 நறுக்கிய தக்காளி
 • 2 பச்சை மிளகாய்
 • 3 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
 • 3 முட்டை
 • உப்பு மற்றும் மிளகு தூள்
 • 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • கொத்தமல்லி இலை
 • ஸ்ப்ரிங் ஆனியன்
 • சீஸ்
 • பர்கர் பன்

மசாலா ஆம்லெட் எப்படி செய்வது

 • 1.ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 • 2.அடுப்பை சிம்மில் வைத்து காய்கறிகள் பொன்னிறமாக வதக்கவும்.
 • 3.மூன்று முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.
 • 4.உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
 • 5.முட்டை மற்றும் வெங்காயம் தக்காளியை நன்கு கலந்து கொள்ளவும்.
 • 6.ஒரு பேனை சூடுபடுத்தி அதில் வெண்ணெய் சேர்த்து இந்த முட்டை கலவையை அதில் ஊற்றவும்.
 • 7.அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து வேக விடவும்.
 • 8.இரண்டாக மடித்து கொள்ளவும்.
 • 9.அடுப்பை நிறுத்தி விட்டு ஆம்லெட்டின் அடிப்பகுதியில் வெண்ணெய் தடவவும்.
 • 10.இதனை ப்ரட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com