மஷ்ரூம் பாலக் கோஃப்தா ரெசிபி (Mushroom Palak Kofta Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

கீரை மற்றும் மஷ்ரூம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கோஃப்தா சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

மஷ்ரூம் பாலக் கோஃப்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • கோஃப்தா ஃபில்லிங் தயாரிக்க:
 • 200 கிராம் பாலக்கீரை, நறுக்கப்பட்ட
 • 2 கப் தண்ணீர்
 • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • 1/2 கப் மஷ்ரூம், நறுக்கப்பட்ட
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • கோஃப்தா தயாரிக்க:
 • 1/2 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
 • 2 மேஜைக்கரண்டி பனீர்
 • 1 மேஜைக்கரண்டி கோயா
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1/4 தேக்கரண்டி குங்குமப்பூ
 • 1 மேஜைக்கரண்டி மைதா
 • 1 தேக்கரண்டி கொத்தமல்லி
 • 1/2 கப் எண்ணெய்
 • க்ரேவி தயாரிக்க:
 • 2 மேஜைக்கரண்டி நெய்
 • 1/2 கப் வெங்காயம், நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
 • 2 தக்காளி, நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
 • 2 தேக்கரண்டி தக்காளி விழுது
 • 1/2 கப் தண்ணீர்
 • 1/4 கப் கோயா + தண்ணீர்

மஷ்ரூம் பாலக் கோஃப்தா எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் பாலக்கீரை மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 2.கீரை வெந்தபின் தண்ணீரை வடித்துவிடும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 3.அடுப்பில் தவா வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெட்டி வைத்த மஷ்ரூமை சேர்க்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 4.அத்துடன் உப்பு, மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வரை வேக விடவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • கோஃப்தா தயாரிக்க:
 • 1.ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பனீரை உதிர்த்து போட்டு கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 2.அத்துடன் கோயா, ஏலக்காய் பொடி, உப்பு, மிளகு மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 3.இவை அனைத்தையும் நன்றாக கலந்து அதில் வதக்கி வைத்த மஷ்ரூம் மற்றும் பாலக்கீரையை சேர்த்து கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 4.இப்போது மைதா, கொத்தமல்லி இரண்டையும் உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 5.கைகளில் எண்ணெய் தடவி கொண்டு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 6.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் உருட்டி வைத்ததை போட்டு பொரித்து எடுக்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • க்ரேவி தயாரிக்க:
 • 1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 2.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 3.ஒரு நிமிடம் வேகவிட்டு பின் அதில் வெட்டி வைத்த தக்காளியை சேர்க்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 4.தக்காளி வதங்கியதும், அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 5.கொத்தமல்லி இலை மற்றும் அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வரை வதக்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 6.சூடு இறங்கியதும், அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 7.அதே கடாயில், அரைத்து வைத்த விழுதை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கெட்டியாகும் வரை வைத்திருக்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 8.அத்துடன் கால் கப் கோயா மற்றும் தண்ணீர் சேர்த்து க்ரேவி போல் செய்து கொள்ளவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 9.எண்ணெயில் பொரித்து எடுத்த கோஃப்தாவை இந்த க்ரேவியில் சேர்க்கவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
 • 10.இந்த க்ரேவியை ஒரு பௌலில் மாற்றி சூடாக பரிமாறவும்.மஷ்ரூம் பாலக் கோஃப்தா
Key Ingredients: பாலக்கீரை, தண்ணீர், வெண்ணெய், மஷ்ரூம், உப்பு, மிளகு, வேகவைத்த உருளைக்கிழங்கு, பனீர், கோயா, ஏலக்காய் பொடி, உப்பு, மிளகு, குங்குமப்பூ, மைதா, கொத்தமல்லி, எண்ணெய், நெய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி இலை, தக்காளி விழுது, தண்ணீர், கோயா + தண்ணீர்
Comments

Advertisement
Advertisement