பார்மீஸன் மஸ்டர்டில் வறுத்த காலிஃப்ளவர் ரெசிபி (Mustard-Parmesan Whole Roasted Cauliflower Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பார்மீஸன் மஸ்டர்டில் வறுத்த காலிஃப்ளவர்
 • சமையல்காரர்: Manish Kusumwal - Berggruen Hotels
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இந்த காலிஃப்ளவர் டிஷ், அசைவம் விரும்பிகளுக்குக் கூட அதிகம் பிடிக்கும். சைட் டிஷ்ஷான இது, மெயின் டிஷ்ஷை விட, அதிக கவனம் பெறும். சிக்கன் வறுப்பது போல் இருந்தாலும், இதன் சுவை அலாதியாக இருக்கும்.

பார்மீஸன் மஸ்டர்டில் வறுத்த காலிஃப்ளவர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 பெரிய காலிஃப்ளவர்
 • 1 பல் பூண்டு
 • 1/4 கப் ஆலிவ் எண்ணெய்
 • 4 மேஜைக்கரண்டி டிஜோன் கடுகு
 • தேவையான அளவு கோஷர் உப்பு
 • சிறிதளவு மிளகு
 • 1/2 கப் கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 1/4 கப் பார்மீஸன் சீஸ், துருவிய
 • எலுமிச்சை

பார்மீஸன் மஸ்டர்டில் வறுத்த காலிஃப்ளவர் எப்படி செய்வது

 • 1.ஓவனில் 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக்கிங் பேப்பருடன் கூடிய ஃபாயிலை வைத்து, காலிஃப்ளவரை சுத்தம் செய்து தண்டு நீக்கி அதில் வைக்கவும்.
 • 2.எண்ணெய், கடுகு, பெப்பர் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 • 3.இதைக் கொண்டு காலிஃப்ளவரின் ஒவ்வொரு தலையிலும் நன்றாக அப்ளை செய்யவும்.
 • 4.நன்றாக தடவியவுடன் 50 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஓவனை மூடி, வேகவிடவும்.
 • 5.அதே நேரத்தில் கொத்தமல்லியையும், பார்மீஸன் சீஸையும் ஒரு கோப்பையில் மிக்ஸ் செய்துக் கொள்ளவும். மீதமிருக்கும் கடுகு கலவையை இதனுடன் சேர்த்து, ஓவனில் இருந்து எடுத்த காலிஃப்ளவரில் நன்கு தடவவும்.
 • 6.கவனத்திற்கு - காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். உப்பு, எலுமிச்சை துண்டு ஆகியவற்ருடன் எக்ஸ்ட்ரா பார்மீஸன் சீஸ் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: காலிஃப்ளவர், பூண்டு, ஆலிவ் எண்ணெய், டிஜோன் கடுகு, கோஷர் உப்பு, மிளகு, கொத்தமல்லி, பார்மீஸன் சீஸ், எலுமிச்சை

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement