நஸகதி போட்டி கபாப் ரெசிபி (Nazaqati Boti Kebab Recipe)

 
விமர்சனம் எழுத
நஸகதி போட்டி கபாப்
நஸகதி போட்டி கபாப்
 • சமையல்காரர்: Mujeebur Rehman - Guest Chef at JW Marriott Hotel Bengaluru
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

நஸகதி போட்டி கபாப் : இந்த கபாப் ரெசிபி நாவில் எச்சில் ஊறவைக்கும். உங்களின் அடுத்த டின்னர் பார்ட்டிக்கு எளிமையாக செய்து நண்பர்களை அசத்தலாம். மிருதுவான மட்டன் துண்டுகளை குங்குமப்பூ, ரோஜா பூ பேஸ்ட், மசாலா மற்றும் தேங்காய் கலந்து ஊறவைத்து சமைக்கப்படுகிறது. உங்களின் விழாக்காலங்களை கொண்டாட்டமாக வைக்கிறது.

நஸகதி போட்டி கபாப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கிலோகிராம் மட்டன்(ஆண் ஆட்டின் தொடைப் பகுதி)
 • 50 gms இஞ்சி பேஸ்ட்
 • 100 gms பச்சை மாங்காய் பேஎஸ்ட்
 • 100 gms வெள்ளை வெங்காயம் பேஸ்ட்
 • 150 gms பிரவுன் வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட
 • 150 gms நெய்
 • 5 gms மஞ்சள் மிளகாய் தூள்
 • 5 gms கொத்தமல்லி தூள்
 • சுவைக்க உப்பு
 • 5 gms கரம் மசாலா
 • 5 gms பொட்லி மசாலா
 • 20 gms கடலை மாவு, வறுக்கப்பட்ட
 • 100 gms தயிர்
 • 5 gms ரோஜா இதழ் பேஸ்ட்
 • 1 gms குங்குமப்பூ
 • 300 gms கசகசா பேஸ்ட்
 • 10 gms முந்திரி பேஸ்ட்
 • 10 gms பாதாம் பேஸ்ட்
 • 10 gms சிரோலி பேஸ்ட்
 • 5 gms உலர்ந்த தேங்காய்
 • 2 மில்லி லிட்டர் கிவ்ரா
 • 4 pcs கிராம்பு
 • 6 pcs பச்சை ஏலக்காய்

நஸகதி போட்டி கபாப் எப்படி செய்வது

 • 1.அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் மட்டம், இஞ்சி பேஸ்ட், பச்சை பப்பாளி பேஸ்ட், வெள்ளை வெங்காய பேஸ்ட், தயிர், மல்லித்தூள், மஞ்சள் மிளகாய்த் தூள், கரம் மசாலா, பொட்லி மசாலா, உப்பு மற்றும் பிரவுன் வெங்காயம் ஆகியவற்ற போடவும்.
 • 2.இரண்டு கைகளால் நன்றாக கலவையை நன்றாக பிசைந்து, பிரிட்ஜில் 1 முதல் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 • 3.வோக்கை எடுத்துக் கொள்ளவும், அடுப்பில் வைத்து சூடானதும் பாதியளவு நெய் போட்டு அதில் கிராம்பு, ஏலக்காய் போடவும், நன்றாக பொரிந்ததும், ஊறவைத்த மட்டனை அதில் போடவும், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, வறுத்த கடலை மாவுபோட்டு நன்றாக கலக்கவும். மிதமான சூட்டில் வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.
 • 4.15 நிமிடங்களுக்குப் பின் இறைச்சி வெந்தததும், முந்திரி, பாதாம், சிரோஞ்சி பேஸ்ட்டு, உலர்ந்த தேங்காய் பவுடர், ரோஜா இதழ் மற்றும் கசகசா பேஸ்ட் ஆகியவற்றை போடவும். மீண்டும் நன்றாக கிளறி 5-10 நிமிடம் வரை வேகவைக்கவும்
 • 5.இப்போது குங்குமப்பூ தண்ணீர் மற்றும் கிவரா தன்ணீர் சேர்த்து 2-3 தடவை நன்றாக கிளறி மூடிவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
 • 6.மெலிதாக வெட்டிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Key Ingredients: மட்டன்(ஆண் ஆட்டின் தொடைப் பகுதி), இஞ்சி பேஸ்ட், பச்சை மாங்காய் பேஎஸ்ட், வெள்ளை வெங்காயம் பேஸ்ட், பிரவுன் வெங்காயம், நெய், மஞ்சள் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு, கரம் மசாலா, பொட்லி மசாலா, கடலை மாவு, தயிர், ரோஜா இதழ் பேஸ்ட், குங்குமப்பூ, கசகசா பேஸ்ட், முந்திரி பேஸ்ட், பாதாம் பேஸ்ட், சிரோலி பேஸ்ட், உலர்ந்த தேங்காய், கிவ்ரா, கிராம்பு, பச்சை ஏலக்காய்
Comments

Advertisement
Advertisement