ஓட்மீல் ஃப்ரைட் எக் ரெசிபி (Oat Meal Porridge with Fried Egg Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஓட்மீல் ஃப்ரைட் எக்
 • சமையல்காரர்: Amit Bajaj - Glocal Junction
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

காலை உணவாக ஓட்ஸ் கஞ்சியை குடிப்பதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனால் வயிறு நிறைவதோடு ஜீரணமும் எளிதாக இருக்கிறது. இத்துடன் முட்டை சேர்த்து சாப்பிட உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைத்துவிடுகிறது.

ஓட்மீல் ஃப்ரைட் எக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 கிராம் ஓட்மீல்
 • 20 கிராம் செர்ரி தக்காளி
 • 10 கிராம் சுரைக்காய்
 • 15 கிராம் குடைமிளகாய்
 • 10 கிராம் மஞ்சள் பூசணி
 • 1 கிராம் கடுகு
 • 5 கிராம் இஞ்சி
 • கறிவேப்பிலை
 • 25 மில்லி லிட்டர் பட்டர்
 • 1 எண்ணிக்கை முட்டை
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 2 கிராம் மிளகு
 • தேவைக்கேற்ப காய்கறி

ஓட்மீல் ஃப்ரைட் எக் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் கடாய் வைத்து அதில் ஓட்ஸ் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 • 2.வறுபட்டதும் தனியே எடுத்து ஆறவைக்கவும்.
 • 3.தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளவும்.
 • 4.அடுப்பில் வேறொரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து, நறுக்கி வைத்த காய்கறிகள் மற்றும் செர்ரி தக்காளியை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
 • 5.அதே கடாயில் பட்டர் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து தாளிக்கவும்.
 • 6.இத்துடன் வறுத்து வைத்த ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அதில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறவும்.
 • 7.ஓட்ஸ் கெட்டியாக கஞ்சி பதத்திற்கு வந்ததும், அதில் தாளித்து வைத்த காய்கறிகளை சேர்க்கவும். அத்துடன் வறுத்த முட்டை சேர்த்து சாப்பிடலாம்.
Key Ingredients: ஓட்மீல், செர்ரி தக்காளி, சுரைக்காய், குடைமிளகாய், மஞ்சள் பூசணி, கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை, பட்டர், முட்டை, உப்பு, மிளகு, காய்கறி
Comments

Advertisement
Advertisement