ஆரஞ்சு பண்ட் கேக் ரெசிபி (Orange Bundt Cake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • ஆரஞ்சு பண்ட் கேக்
 • ஆரஞ்சு பண்ட் கேக்
 • சமையல்காரர்: Sharmeen Indorewalla
 • Restaurant: The Parfait Co.
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

தேன், வெண்ணெய், வென்னிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து செய்யப்படும் இந்த பண்ட் கேக் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஆரஞ்சு பண்ட் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 250 gms மைதா
 • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 160 gms தேன்
 • 220 gms வெண்ணெய்
 • 4 பெரிய முட்டை
 • 1 தேக்கரண்டி வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்
 • 1/2 ஆரஞ்சு
 • 1/2 ஆரஞ்சு தோல்
 • 2 ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு பண்ட் கேக் எப்படி செய்வது

 • 1.மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும்.
 • 2.மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு சலித்து கொள்ளவும்.
 • 3.ஆரஞ்சு பழத் தோலை ஒரு பக்கம் மட்டும் துருவி வைத்து கொள்ளவும். ஆரஞ்சு பழச் சாறு எடுத்து வடிகட்டி வைக்கவும்.
 • 4.மீதமுள்ள பாதியை வட்டமாக வெட்டி வைக்கவும்.
 • 5.பேனில் வெண்ணெய் தடவி அதில் வெட்டி வைத்த ஆரஞ்சுகளை வைக்கவும்.
 • 6.ஒரு பௌலில் தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 7.முட்டை, வென்னிலா மற்றும் ஆரஞ்சு தோல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 8.மேலும் அதில் மைதா, ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.
 • 9.பேக்கிங் பேனில் இந்த கலவையை ஊற்றி, அரைமணி நேரம் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும்.
 • 10.பின் கேக்கை வெட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
 • 11.பின் பெல்ஜியன் சாக்லேட் பார்ஃபிட் ஸ்கூப் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தேன், வெண்ணெய், முட்டை, வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், ஆரஞ்சு, ஆரஞ்சு தோல், ஆரஞ்சு சாறு
Comments

Advertisement
Advertisement