பனீர் டமாட்டர் கி சப்ஜி ரெசிபி (Paneer Tamatar Ki Subzi Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
பனீர் டமாட்டர் கி சப்ஜி
 • சமையல்காரர்: Sanjeev Chopra - Vivanta Ambassador
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

தக்காளியின் முழுமையான ருசியில் பனீர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த சப்ஜி சமைப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். சப்பாத்தி மற்றும் பராத்தாவிற்கு சேர்த்து சாப்பிட ஏகபோக பொருத்தமாக இருக்கும்.

பனீர் டமாட்டர் கி சப்ஜி சமைக்க தேவையான பொருட்கள்

 • 400 கிராம் பனீர்
 • 2 தக்காளி
 • 1 தேக்கரண்டி இஞ்சி
 • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 மேஜைக்கரண்டி நெய்

பனீர் டமாட்டர் கி சப்ஜி எப்படி செய்வது

 • 1.தக்காளியை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் சேர்க்கவும்.
 • 2.அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் தாளிக்கவும்.
 • 3.இத்துடன் அரைத்து வைத்த தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.
 • 4.சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
 • 5.கொதித்து பச்சை வாசனை போனதும், வெட்டி வைத்த பனீர் சேர்த்து வேக விடவும்.
 • 6.சப்பாத்தி மற்றும் பராத்தாவுடன் சேர்த்து சூடாக சாப்பிடலாம்.
Key Ingredients: பனீர், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், நெய்
Comments

Advertisement
Advertisement