மின்ட் சாஸ் சேர்த்த பாஸ்தா ரெசிபி (Pasta with mint sauce Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
மின்ட் சாஸ் சேர்த்த பாஸ்தா
 • சமையல்காரர்: Cynthea T Philp
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மின்ட் சாஸ் சேர்த்த பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

மின்ட் சாஸ் சேர்த்த பாஸ்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • லாங் பாஸ்தா – 250 கிராம்
 • மக்ரோனி – 100 கிராம்
 • புதினா சாஸ் – 4 மேஜைக்கரண்டி
 • சாஸேஜஸ் – 5
 • க்ரீன் ஆனியன் – ஒரு கொத்து
 • பூண்டு – ஒரு பல்
 • கீரை பேஸ்ட் – 3 மேஜைக்கரண்டி
 • உப்பு – தேவைக்கேற்ப
 • மிளகு தூள் – தேவைக்கேற்ப
 • ஆலிவ் எண்ணெய் – தேவைக்கேற்ப
 • மின்ட் சாஸ் தயாரிக்க:
 • புதினா – ஒரு கொத்து
 • கொத்தமல்லி இலை – அரை கொத்து
 • பச்சை மிளகாய் – 4
 • புளி கரைசல் – 2 தேக்கரண்டி
 • உப்பு – தேவைக்கேற்ப
 • தண்ணீர் – தேவைக்கேற்ப

மின்ட் சாஸ் சேர்த்த பாஸ்தா எப்படி செய்வது

 • 1.பாஸ்தா செய்வதற்கு அதன் கவரில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்யுங்கள்.
 • 2.பாஸ்தா சமைப்பதற்கு எண்ணெய் தேவையில்லை. கொதிக்கும் நீரில் பாஸ்தாவை போட்டாலே போதும் நன்றாக வெந்துவிடும்.
 • 3.வெந்தபின், தண்ணீரை வடித்து பாஸ்தாவை தனியே வைக்கவும்.
 • 4.சாஸ் தயாரிக்க, ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.
 • 5.மிதமான சூட்டில், நறுக்கி வைத்துள்ள க்ரீன் ஆனியன், பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
 • 6.மூடி வைத்து வதக்கும் போது வெங்காயத்தில் உள்ள பச்சை நிறம் வெளியேறிவிடும். அதனால் மூடி வைக்க கூடாது.
 • 7.க்ரீன் ஆனியன் கிடைக்காத போது நாம் வழக்கமாக பயன்படுத்தும் வெங்காயத்தையே பயன்படுத்தலாம்.
 • 8.வெங்காயம் வதங்கிய பின் அதில் சாஸேஜஸை சேர்க்கவும். அத்துடன் பசலைக்கீரை பேஸ்ட், வேக வைத்துள்ள பாஸ்தாவையும் சேர்க்கவும்.
 • 9.அதில் பாஸ்தா வடித்த நீரை அரை கப் அல்லது உங்களுக்குத் தேவையான அடர்த்தி வரும் வரை சேர்க்கலாம்.
 • 10.இரண்டு நிமிடங்கள் வெந்ததும், அத்துடன் மின்ட் சாஸ் சேர்த்து 4 நிமிடங்கள் வரை கிளரவும்.
 • 11.இறுதியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். அலங்கரிக்க, வெட்டி வைத்த வெங்காயத்தை தூவி, கால் பங்கு எலுமிச்சையை பிழிந்து விடவும்.
 • 12.இறுதியாக க்ரீமுடன் சேர்த்துப் பரிமாறலாம்.
Comments

Advertisement
Advertisement