பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சூப் ரெசிபி (Peas and Potato Soup with Salsa Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சூப்
 • சமையல்காரர்: Sanjeev Kapoor
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப் உங்கள் சோர்வை போக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும். இந்த புது விதமான சுப்பை விட்டிலேயே செய்து பாருங்கள்.

பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பச்சை பட்டாணி
 • 2 உருளைக்கிழங்கு
 • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1/2 வெங்காயம்
 • 1 பிரியாணி இலை
 • சுவைக்க உப்பு
 • 1/2 கப் பால்
 • மெல்பா டோஸ்ட் தேவைக்கேற்ப
 • for garnishing புதினா
 • மேங்கோ சால்ஸா தயாரிக்க:
 • 1/2 தோல் நீக்கப்பட்ட மாம்பழம்
 • 4-5 புதினா இலைகள்
 • 1 சிவப்பு மிளகாய்
 • 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை
 • சுவைக்க உப்பு
 • 2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு

பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சூப் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் தவா வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • 2.அத்துடன் பச்சை பட்டாணி, பிரியாணி இலை சேர்த்து நன்கு கிளறவும்.
 • 3.உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
 • 4.அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை நன்கு வேக விடவும்.
 • 5.பிரியாணி இலையை நீக்கி விட்டு உருளைக்கிழங்கு வேகவைத்த நீரை வடித்து வைத்து கொள்ளவும். பின் அதனை நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 6.பின் அதனை ஒரு நான்ஸ்டிக் பேனில் வேக வைக்கவும்.
 • 7.புதினா மற்றும் மாம்பழத்தை பொடிபொடியாக நறுக்கி ஒரு பௌலில் போட்டு கொள்ளவும். அத்துடன் சிவப்பு மிளகாய், நாட்டு சர்க்கரை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 8.மெல்பா டோஸ்ட் மேல் மேங்கோ சால்ஸா தடவி வைக்கவும்.
 • 9.இந்த சூப்பை ஒரு பௌலில் மாற்றி அத்துடன் மேங்கோ சால்ஸா சேர்க்கப்பட்ட மெல்பா டோஸ்ட் சேர்க்கவும். மேலும் புதினா இலைகளை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement