போர்த்துக்கல் மீன் ஸ்டூ ரெசிபி (Portugese Fish Stew Recipe)

 
விமர்சனம் எழுத
போர்த்துக்கல் மீன் ஸ்டூ
போர்த்துக்கல் மீன் ஸ்டூ செய்முறை
 • சமையல்காரர்: Manish Kusumwal
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

போர்த்துக்கல் மீன் ஸ்டூ செய்முறை : வார இறுதி நாட்களில் செய்து கொண்டாடலாம். போர்த்துக்கல் நாட்டு மீன் ஸ்டூவான இதை எளிதாக செய்து சாப்பிடலாம். உருளைக் கிழங்கு மீன் ஃபில்லட் மற்றும் சில காய்கறிகளுடன் மீன் ஸ்டூவும் வைத்து சாப்பிடலாம். சுவையான இந்த ஸ்டூவை சாதத்துடன் சாப்பிட மிகவும் ஏற்றது.

போர்த்துக்கல் மீன் ஸ்டூ சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கிலோகிராம் மீன் (2, 3 வகையான மீன்களை பயன் படுத்தலாம்
 • 5-10 பெரிய இறால்
 • 1 கிலோகிராம் உருளைக் கிழங்கு, நறுக்கப்பட்ட
 • 3 வெங்காயம்
 • 5 பூண்டு , நறுக்கப்பட்ட
 • 1 சிவப்பு குடைமிளகாய்
 • கொத்தமல்லி
 • சில துளிகள் மிளகாய் சாஸ்
 • 1 தேக்கரண்டி பாப்ரிகா
 • 1 கப் ஆலிவ் ஆயில்
 • 50 மில்லி லிட்டர் ஒயிட் ஒயின்
 • சுவைக்க உப்பு

போர்த்துக்கல் மீன் ஸ்டூ எப்படி செய்வது

 • 1.கடாயில் வெங்காயம், பூண்டு, தக்காளி மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெட்டிய உருளைக் கிழங்கு மற்றும் மீனை லேயர் லேயராக வைக்கவும்.
 • 2.வெங்காயம், மிளகாய், பாப்ரிகா, உப்பு ஆகியவற்றை மேல் லேயராக வருவது போல் வைக்கவும்.
 • 3.ஆலிவ் ஆயிலை ஒவ்வொரு லேயருக்கும் தேவையான அளவு ஊற்றவும்.
 • 4.எல்லா லேயரும் வைத்த பின் சீசனிங்க் செய்து விட்டு ஒயிட் ஒயின் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
 • 5.மூடியை வைத்து மூடி கொதிக்க விடவும்.
 • 6.பாத்திரத்தை மூடி குறைவான தீயில் நீண்ட நேரம் வேக வைக்கவும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்து விட்டால் ஸ்டு தயாராகி விட்டது என அர்த்தம்.
 • 7.நெய் சாதத்துடன் இதைப் சாப்பிட சுவையாக இருக்கும்.
Key Ingredients: மீன் (2, 3 வகையான மீன்களை பயன் படுத்தலாம், இறால், உருளைக் கிழங்கு, வெங்காயம், பூண்டு , சிவப்பு குடைமிளகாய், கொத்தமல்லி, சில துளிகள் மிளகாய் சாஸ், பாப்ரிகா, ஆலிவ் ஆயில், ஒயிட் ஒயின், உப்பு
Comments

Advertisement
Advertisement