ராகி தோசை ரெசிபி (Ragi Dosa Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
ராகி தோசை
 • சமையல்காரர்: Priyam Naik
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பெரும்பாலானோருக்கு தோசை மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. குறிப்பாக ராகி தோசை நீரிழிவு நோய்க்கு மிகவும் உகந்தது. இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது.

ராகி தோசை சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 கப் ராகி மாவு
 • 1/2 கப் அரிசி மாவு
 • 1/2 கப் புளித்த தயிர்
 • 3-4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 கப் கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட
 • சுவைக்க உப்பு
 • தாளிக்க:
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 5-6 கறிவேப்பிலை
 • 1 தேக்கரண்டி எண்ணெய்

ராகி தோசை எப்படி செய்வது

 • 1.ராகி மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து இரண்டு மணி நேரம் தனியே எடுத்து வைக்கவும்.
 • 2.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதை மாவில் சேர்க்கவும்.
 • 3.ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து அதில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளவும். கலந்து வைத்த மாவை லேசான தோசையாக ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேகவிடவும்.
 • 4.தோசையை சுற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி முருகலாக தோசை சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: ராகி மாவு, அரிசி மாவு, புளித்த தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு, தாளிக்க:, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement